fbpx
Homeபிற செய்திகள்கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

கூட்டுறவு பட்டய பயிற்சிக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது என்று கோவை மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் எஸ்.பார்த்திபன் தெரிவித்துள்ளார்.

அவர் இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
கோயம்புத்தூர் இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் 2023-2024ம் ஆண்டிற்கான முழு நேர மேலாண்மை பயிற்சிக்கான இணையவழி சேர்க் கைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் அக்டோபர் 6-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் தற்போது இணையவழியில் விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு நேரடியாக இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தில் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப கட்டணம் ரூபாய் 200 யை மேலாண்மை நிலையத்தில் நேரடியாக செலுத்த வேண்டும். விண்ணப்ப சரிபார்ப்புக்கு அசல் சான்றிதழ்கள் கொண்டு வர வேண்டும் மற்றும் சான்றிதழ்களில் அத்தாட்சி செய்த நகல்கள் நேரில் கொண்டுவர வேண்டும்.

தேர்வு செய்யப்பட்டவர்கள் உடனடியாக பயிற்சி கட்டணம் ரூ.18750/- ஐ மேலாண்மை நிலையத்தில் நேரில் Paytm மூலம் செலுத்தி வகுப்பில் கலந்துகொள்ள வேண்டும்.

பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி +2 தேர்ச்சி, 01.08.2023 அன்று 17 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும் அதிகபட்ச வயது வரம்பு இல்லை. ஆண் பெண் இருபாலரும் விண் ணப்பிக்கலாம். விவரங்களுக்கு இராமலிங்கம் கூட்டுறவு மேலாண்மை நிலையத்தினை தொடர்பு கொள்ளலாம்.

தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் 0422-2442186, 0422-2440219. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img