ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை செவிலியர்களின் முக்கிய பங்கை சிறப்பித்து செவிலியர் தினத்தை கொண்டாடினார்கள்.
கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை வளாகத்தில் மே 12 செவிலியர் தினத்தையொட்டி, நோயாளிகளின் பராமரிப்பில் முன்ன ணியில் இருக்கும் செவிலியர்களின் சேவையை கௌரவித்து அங்கீ கரிக்கும் நோக்கத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை செவிலியர்களின் முடி வில்லாத சேவையை குறிக்கும் வகையில் சர்வதேச செவிலியர் தினத்தையும் மற்றும் புளோரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை நினைவுகூரும் வகையிலும் இந்நிகழ்வு கொண்டாடப்பட்டது.
முதன்மை நர்ஸிங் அதிகாரி டாக்டர் ஜெ.கற்பகம் வரவேற்றார்.
ஆர்விஎஸ் நிறுவனங்களின் செய லாளர் சாரம்மா சாமுவேல் துவக்கி வைத்து பேசினார்.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட் டளையின் இணை நிர்வாக அறங் காவலர் ஆர்.சுந்தர் தலைமை தாங்கி பேசினார். நோயாளிகளுக்கு அயராத சிகிச்சை அளிக்கும் செவிலியர்களுக்கும் அவர்கள் உள்ளடக்கியிருக்கும் கவனிப்பு மற்றும் இரக்க உணர்வை அடையாளப்படுத்தும் வகையில் வானத்தில் பலூன் பறக்கவிடப்பட்டது.
மருத்துவமனை நிர்வாகத்தினர் மருத்துவத் துறையில் செவிலியர் களின் முக்கியத்துவமும் , சுகாதாரப் பாதுகாப்பில் அவர் களின் பங்களிப்பையும் பற்றி எடுத்துரைத்தார்கள். சுகாதார வசதிக்கு முதுகெலும் பாக இருப்பதற்காகவும் செவிலியர் களை கௌரவித்தனர்.
கடினமான காலங்களில், தொற்றுநோய்களின் சவால்களைக் கையாளும் அதே வேளையில், நோயாளிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு ஆறுதலாகவும் ,நம்பிக்கையையும் அளித்து நோயாளிகளின் பராமரிப்பில் செவி லியர்கள் தொடர்ந்து முன்னணியில் உள்ளனர் என பாராட்டினர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை அனைத்து செவிலியர்களின் தியா கத்தையும் அர்ப்பணிப்பையும் ,மருத்துவத் துறையில் அவர்களின் முடிவில்லா பங்களிப்பிற்காக நன்றி தெரிவித்தது.



