ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளையின் பெண்கள் அணியினர் சென் னையின் ஹெச்ஆர் (HR) கிரிக்கெட் அகாடமி நடத்தும் மாபெரும் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டியில், முதல் 4 மேட்ச்சுகளில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.
ஹெச்ஆர் கிரிக்கெட் அகாடமியின் பெண்கள் கோப்பைக்காக நடைபெறும் இப்போட்டிகள் கேளம்பாக்கம் சி.எஸ்.கே. அகாடமி மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.
போட்டியில் ஓர் அணிக்கு மொத்தம் 8 லீக் ஆட்டங்கள். போட்டியின் முதல் பிரிவில் தற்போது நடைபெற்ற 4 மேட்ச்சுகளிலும் ஸ்ரீ ராம கிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளையின் பெண்கள் அணியினர் அதிரடியாக ஆடி வெற்றி பெற்றுள்ளனர்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளையின் பெண்கள் அணியினருக்கு இதுவே முதல் கள அனுபவம் என்பது குறிப்பிடத்தக்கது. முதல் மேட்ச்சில் ஹெச்ஆர் கிரிக்கெட் அகாடமி அணியை எதிர்கொண்ட ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளை அணியினர், 169 ரன்களை குவித்து 170 ரன்களை இலக்காக நிர்ணயித்தனர்.
சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தி ஹெச்ஆர் கிரிக்கெட் அகாடமி அணியை 79 ரன்கள் வித்தியா சத்தில் வீழ்த்தினர். 33 பந்துக ளுக்கு 69 ரன்கள் குவித்த ருத்ர பிரியா ஆட்டநாயகியாக அறிவிக்கப்பட்டார்.
இரண்டாவது மேட்ச்சில் லைப் ஸ்போர்ட்ஸ் அணியை எதிர்கொண்டது. லைப் ஸ்போர்ட்ஸ் நிர்ணயித்த 130 ரன்களை, 12.3 ஓவர்களில் எடுத்து ஆட்டத்தை தன்பக்கம் திருப்பி வெற்றிகொண்டது. மோனிஷா ஆட்ட நாயகியாக தேர்வுசெய்யப்பட்டார்.
மூன்றாவது மேட்ச்சில் சி.எஸ்.கே. அகாடமி அணியை எதிர்கொண்டு 6 விக்கெட் கணக்கில் வென்றது. ஸ்வேதா ஆட்டநாயகியாக தேர்வுசெய்யப் பட்டார். நான்காவது மேட்ச்சில் ஸ்போர்ட்ஸ் யூனிவர்சிட்டி அணியை எதிர்கொண்டு 6 விக்கெட் கணக்கில் வெற்றி பெற்றது.
இதில் ருத்ர பிரியா மிக மதிப்புமிக்க வீரராக அறிவிக்கப் பட்டார். அதிக விக்கெட்டுகளை எடுத்த முதல் நபராக சந்தியா அறிவிக்கப்பட்டார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா கிரிக்கெட் அறக்கட்டளை அணி வீரர்களுக்கு ஏ.ஜி.குருசாமி பயிற்சியளித்தார்.