சமுதாயத்திலிருந்து புகையிலை நீக்குவது ஒரு பெரிய சவால். அதற்கு ஆசிரியர்கள், மருத்துவ அமைப்புகள் மற்றும் அனைத்து பொதுமக்கள் ஆதரவு தேவைப்படுகிறது என்று கோவை கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பேசினார்.
இந்தியாவிலேயே முதல்முறையாக புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் இன்ஃபோகிராஃபிக் இணைய வழி புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் கோவை சித்தாபுதூர் பகுதியில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் (மே 31) வெளியிட்டது.
இந்த மையத்தின் சார்பில் உலகப் புகையிலை எதிர்ப்பு தின நிகழ்வு நடந்தது.
எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் ஆர். சுந்தர் முன்னிலை வகித்தார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மைய இயக்குநர் டாக்டர் பி. குகன் வரவேற்றார். புற்றுநோய் விழிப்புணர்வு தகவல்கள் அடங்கிய டிஜிட்டல் இன்ஃபோகிராஃபிக் இணைய வழி புத்தகத்தை பற்றி டாக்டர் குகன் கூறியதாவது:
தற்போது இணைய வழியில் தகவல்கள் மக்களை சேர்வது மிக வேகமாக நடைபெற்று வரும் ஒன்றாக இருப்பதால் இணைய வழியில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை மக்க ளிடம் எடுத்துச் செல்ல வேண் டும் என்று கடந்த சில ஆண்டுகளாக முயற்சித்து வருகிறோம்.
இந்த புத்தகத்தில் புகை பிடிப்பதனால் வரும் பாதிப்புகள் குறித்தும் புகைப் பழக்கத்தை கைவிடுவதால் கிடைக்கும் நலன்கள் பற்றியும் புகையிலை உட்கொள்வதால் வரும் பாதிப்புகள் குறித்தும் முக்கிய தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன.
நவீன இணைய வழி புத்தகம்
புகைபிடிக்கும் பழக்கத்தையும் புகையிலை உட்கொள்வதையும் கைவிடுவதற்கான எளிய டிப்ஸ்கள் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன. வீடியோ வடிவில் தகவல்கள் இந்த புத்தகத்தில் இரு மொழிகளில் இடம் பெற்று இருக்கும்.
அனைவரும் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் தகவல்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றார். கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ் ணன் நவீன இணைய வழி புத்தகத்தை வெளியிட்டு பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்கும் 1000 க்கும் மேற்பட்ட நபர்கள் மீது வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. மே 2023 வரை, இதுபோன்ற 250 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன, 200 + நபர்கள் கைது செய்யப்பட்டு, தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களில் 2 டன் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சமீபத்தில் கோவை மாநகராட்சி உதவியுடன் கோவை நகரில் குட்கா விற்கும் 170 கடைகள் மூடப்பட்டன. 450 கிலோ புகையிலை கைப்பற்றப்பட்டது. 150 கிலோ கூல் லிப் தயாரிப்பு இருந்தது, இது பள்ளி குழந்தைகளை இலக்காகக் கொண்டுள்ளது.மக்களால் புகையிலை பயன்பாட்டை அகற்ற முடியாது.
புகையிலை தீங்கு விளைவிக்கும் தாக்கங் கள் குறித்து விழிப்புணர்வு அதிகம் தேவை. குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே, இந்த புகையிலை விற்பனையாளர்களால் அவை குறி வைக்கப்படுகின்றன. சமுதாயத்திலிருந்து புகையிலையை நீக்குவது ஒரு பெரிய சவால்.
அதற்கு ஆசிரியர்கள், மருத்துவ அமைப்புகள் மற்றும் அனைத்து பொதுமக்கள் ஆதரவு தேவைப்படுகிறது. புகையிலை பயனர்களின் நடத்தையில் மாற்றத்தை உருவாக்கக்கூடிய விழிப்புணர்வு முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்றார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கார்த்திகேஷ் நன்றி கூறினார்.