ஜி.கே.என்.எம்.மருத்துவமனை, ஜி.கே.என்.எம்.செவிலியர் பள்ளி இணைந்து உலக புகையிலை எதிர்ப்பு நாள் விழிப்புணர்வு திரள் ஒன்றை நடத்தியது.
செவிலியர் பள்ளி மாணவ, மாணவிகள், விழிப்புணர்வு வாசகங்கள் அடங் கிய பதாகைகளை ஏந்தி லட்சுமி மில் சிக்னலில் அதன் வழியாக வந்த பொதுமக்களுக்கு புகையிலை பயன் பாட்டின் தீங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
சிறப்பு விருந்தினராக காவல் உதவி ஆணையர் மதிவாணன் பங்கேற்றார்.
ஜி.கே.என்.எம்.மருத்துவமனை புற்று நோயியல் மருத்துவம் துறைத் தலைவர் டாக்டர் சிவநேசன், செவிலியர் பயிற்சிப் பள்ளி முதல்வர் சாந்தி ஆகியோர் தலைமை தாங்கினர்.
புகையிலையினால் ஆண்டுதோறும் 13 லட்சம் பேர் இந்தியாவில் உயிர் இழக்கின்றனர். உலகில் சுமார் 1 கோடி பேர் புகையிலையை தொடர்ந்து பயன்படுத்துவதால், உயிர் இழப்பதாக ஆய்வு தெரிவிக்கிறது.
‘நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல’
இதனால் மக்களுக்கு புகையிலையின் கேடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவே ஆண்டுதோறும் மே 31-ம் உலக புகையிலை எதிர்ப்பு நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த வருடத்தின் கருப்பொருளாக ‘நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல’ என்பதாகும்.
ஆண்டு தோறும் சுமார் 35 லட்சம் ஹெக்டர் விவசாய நிலங்கள், புகையிலை பயிரிடுவதற்காக மாற்றப்படுகின்றன. 2 லட்சம் ஹெக்டர் நிலங்கள் அழிக்கப்ப டுகின்றன.
இதனால் உற்பத்தி குறைந்து, புகையிலை உற்பத்தி அதிகமாகி உள்ளது. இது பற்றிய போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தவே, இந்த வருட புகையிலை எதிர்ப்பு நாள் கருப்பொருளாக நமக்கு தேவை உணவு, புகையிலை அல்ல என்பது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
புகையிலை பாதிப்புகளில் முக்கி யமான ஒன்று கேன்சர், உதடு கேன்சர், வயிற்று கேன்சர், நுரையீரல் கேன்சர் என பல வகையான கேன்சர்கள் உண்டு.



