fbpx
Homeபிற செய்திகள்‘கல்லூரியின் நிலையான வளர்ச்சிக்கு அச்சாணிகள்’ முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் புகழாரம்

‘கல்லூரியின் நிலையான வளர்ச்சிக்கு அச்சாணிகள்’ முன்னாள் மாணவர்கள் சந்திப்பில் புகழாரம்

கோவை நவ இந்தியாவில் உள்ள ஸ்ரீராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ‘சீனியர் செனாரியோ -2023’ என்ற தலைப்பில், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது.

கல்லூரி துவங்கிய காலம் முதல் தற்போது வரையுள்ள மாணவர்கள், ஆசிரியர்களின் புகைப்படங்கள், சாதனைகளைப்பட்டியிலிடும் வகையிலான புகைப்படங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன.

முன்னாள் மாணவர்கள் குடும்பத்துடன் வந்திருந்தனர். தங்கள் துறைகளுக்குச் சென்று ஆசிரியர்களைச் சந்தித்து பேசினர். எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயண சுவாமி பேசியதாவது:
கல்லூரி தொடங்கி 36 ஆண்டுகளான நிலையில், உயர்கல்வியில் உயரம் தொட்டுள்ளது.

இதில் முன்னாள் மாணவர்களின் பங்கு முக்கியமானது. நீங்கள் அனைவரும் இக்கல்லூரியின் தூதுவர்கள். இன்றைய மாணவர்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்பவர்கள்.

வர்த்தக வாய்ப்புகள்

கல்லூரியின் நிலையான வளர்ச்சிக்கு அச்சாணிகள். தரமான கல்வி அளிக்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படுகின்றன. வர்த்தக வாய்ப்புகள் ஏற்படுத்தித்தரப்படுகின்றன.

உங்களுடைய அனுபவங்கள், வழிகாட்டுதல்களை மாணவர் சமுதாயத்திற்கு அளியுங்கள். இது அவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்க உதவும். வாழ்நாள் முழுவதுமான உங்களுடைய ஒத்துழைப்பு இக்கல்லூரி எதிர்நோக்கிகாத்திருக்கிறது என்றார்.

முன்னாள் மாணவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டன. கல்லூரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் முனைவர் ஆர்.பிரபு, செயலர் முனைவர் ஜி.செந்தில் குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img