டெல்லியில் நடந்த குடியரசு தின அணிவகுப்பில் கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்கள் ஆல்வின் ஸ்மித் அப்பாதுரை, ஷானா கோலட் ஆகியோர் பங்கேற்றனர்.
இதையொட்டி அவர்கள் கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணனை சந்தித்து வாழ்த்துபெற்றனர். மாணவர்களுக்கு ஆணையாளர் பாராட்டு தெரிவித்தார்.