எஸ்.என்.ஆர்.சன்ஸ் அறக்கட் டளை கோவையில் செயல்பட்டு வருகிறது. ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்வி நிறுவனங்கள், ஸ்ரீ ராமகி ருஷ்ணா மருத்துவமனை உட்பட 15 நிறுவனங்கள் மூலமாக மருத்துவம், கல்வி மற்றும் சமூகச் சேவை போன்றவை இந்த அறக் கட்டளை மூலமாக அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த அறக்கட்ட ளையின் நிர்வாக அறங்காவலராக சுந்தர் பதவியேற்றுக் கொண்டார்.
கோவையில் தொழில்துறை சார்ந்த பாரம்பரியமிக்கக் குடும்பத்தில் பிறந்த ஆர்.சுந்தர், சென்னையிலுள்ள லயோலா கல்லூரியில் பொருளாதாரத்தில் பட்டம் பெற்றவர்.
அதைத்தொடர்ந்து லண்டனில் உள்ள கென்சிங்டன் கல்லூரியில் எம்.பி.ஏ. பட்ட மேற்படிப்பை முடித்தார். லண்டனில் உள்ள வோடபோன் நிறுவனத்தில் பொறியாளராகத் தனது தொழில் பயணத்தைத் தொடங்கி, சில காலம் பணியாற்றி பின்னர் இந்தியாவிற்கு திரும்பி, தனது குடும்பத் தொழில்களோடு தன்னை இணைத்துக் கொண்டார்.
இவரைத்தொடர்ந்து, இணை நிர்வாக அறங்காவலராக எஸ்.நரேந்திரன் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இந்நிகழ்வில் உடன் எஸ்.கோபாலகிருஷ்ணன் முன்னாள் மேயர் மற்றும் நிர்வாக இயக்குனர், ஆர்வீ குழுமம் மற்றும் s.பிரியங்கா கார்த்திகேயனி, நிர்வாக இயக்குனர், பி – எஸ் குழுமம் இருந்தனர்.