தமிழ்நாடு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழ் மாணவர் மன்றம் சார்பாக நாமக்கல் அரசு மேல்நிலைப்பள்ளி நல்லிபாளையம், நாமக்கல் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி முதலைப்பட்டி, மற்றும் முதலைப்பட்டி புதூர் ஆகிய பள்ளிகளில் தமிழ் மொழியின் சிறப்பு மற்றும் திருக்குறளும் வாழ்வியலும் என்ற தலைப்பில் கட்டுரை போட்டி நடைபெற்றது.
இப்போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடம் பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசு ரூ.5000 இரண்டாம் பரிசு ரூ.3000 மூன்றாம் பரிசு ரூ.2000 ம் ஒவ்வொரு பள்ளிகளுக்கும் வழங்கப்பட இருக்கிறது. இதில் சுமார் 200க்கும் மேற் பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மிகவும் ஆர்வமாக கட்டுரை போட்டிகளில் பங்கு பெற்றனர்.
மேலும் நல்லி பாளையம் அரசு பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவரும் மேற்கு நகர கழகச் செயலாளருமான சிவகுமார், நாமக்கல் திமுக மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் கடலரசன் கார்த்தி, மாமன்ற உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி தலைமை யாசிரியர்கள் சாந்தி பாண் டியன், மணிமேகலை, ஜெய லட்சுமி, முதலைப்பட்டி முன்னாள் தலைவர் பழனிவேல், ஆசிரியர் பிரபு, நகர மாணவர் அணி நிர்வாகிகள் தமிழ் மாண வர் அமைப்பைச் சேர்ந்த மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.