fbpx
Homeபிற செய்திகள்புல்லர்டன் இந்தியா சார்பில் பசுவிகாஸ் தினத்தில் 10,900 கால்நடைகளுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை

புல்லர்டன் இந்தியா சார்பில் பசுவிகாஸ் தினத்தில் 10,900 கால்நடைகளுக்கு இலவச பரிசோதனை, சிகிச்சை

இந்தியாவின் முன்னணி NBFC-களில் ஒன்றான ஃபுல்லர்டன் இந்தியா, அதன் வருடாந்திர பசு விகாஸ் தினத்தின் மூலம், கள கால்நடை பராமரிப்பு விழிப்புணர்வு முனைப்பு முயற்சிகளில் மிகப்பெரிய ஒன்றை ஏற்பாடு செய்துள்ளது.

தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் 61 இடங்களில் 10,900க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு இலவச பரிசோதனை மற்றும் மருத்துவ உதவிகள் வழங்கப்பட்டு கால்நடை பராமரிப்பு முகாம்கள் நடத்தப்பட்டன.

மிகப் பெரிய திட்டத்தின் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள 71,400க்கும் அதிகமான கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்து, 15 மாநிலங்களில் 500க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய 374 இடங்களில் முகாம்கள் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டன.

இலவச உடல்நல பரிசோதனை முகாம்

புல்லர்டன் இந்தியா, பிப்.4 முதல் 11 வரை இந்தியா முழுவ தும் 245 இடங்களில் கால்நடை உரிமையாளர்களுக்கு இலவச உடல்நல பரிசோதனை முகாம்களை ஏற்பாடு செய்தது. 20,400க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.

ஃபுல்லர்டன் இந்தியாவின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் சாந்தனு மித்ரா கூறியதாவது: கிராமப்புறங்களில் வசிப்பவர்களுக்கு, கால்நடைகள் இன்றிய மையாததாக இருப்பதால், வாடிக்கையாளர்களுக்கு மட்டு மல்ல, சமூக மதிப்பை மேம்படுத்தும் வகையில், பெரிய அளவிலான விவசாய சமூகங்க ளுக்கும் கால்நடை சுகாதார வசதிகளை வழங்குவதில் கவனம் செலுத்துவதற்காக, ஆண்டுதோறும், பசு விகாஸ் தினத்தை நாங்கள் நடத்துகிறோம்.

இந்த முயற்சி, கால்நடை உரிமையாளர்கள் தங்கள் கால்நடைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்தி, அவர்களின் வீட்டு வருமானத்தை அதிகரித்து, நேர்மறையான சமூக தாக்கத்தை ஏற்படுத்துவதைக் கண்டுள்ளது” என்றார்.

நிறுவனம் தனது முதல் பசுவிகாஸ் தினத்தை 2014ல் ஒரு நாள் கால்நடை பராமரிப்பு முகாமாக இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் அறிமுகப்ப டுத்தியது.

பசுவிகாஸ் தினத்தில் இதுவரை 2,71,000 கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தது, 80,000க்கும் மேற்பட்ட கால்நடை உரிமையாளர்கள் பயனடைந்துள்ளனர்.

ஃபுல்லர்டன் இந்தியாவின் தலைமை மக்கள் அதிகாரி சுவாமி நாதன் சுப்ரமணியன் கூறுகையில், பசுவிகாஸ் தின திட்டத்தின் மூலம், தரமான கால்நடை சுகா தாரத்திற்கான அணுகலுடன் முழுமையான சேவைகளை அவர்களுக்கு வழங்குவதன் மூலம் இந்த சமூகத்தை மேம்படுத்துவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள் ளோம் என்றார்.

படிக்க வேண்டும்

spot_img