பேஷன் மற்றும் மாடலிங் துறையில் அதிக ஆர்வம் உள்ளவர்களை ஊக்குவிக்கும் விதமாக சவீதா ஆர்க்கிடெக்சர் அன்ட் டிசைன் கல்லூரி சார்பில் ‘மிஸ்டர் அன்ட் மிஸ் தமிழ்நாடு 2023’ போட்டியில் பங்கேற்ப வர்களை தேர்வு செய்வதற் கான முதல் சுற்று நிகழ்ச்சி தண்டலம், சிமாட்ஸ் பல் கலைக்கழக வளாகத்தில் உள்ள நல்லி அரங்கில் நடைபெற்றது.
இதில் சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்க ளில் இருந்து சுமார் 60 இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
இவர்கள் பல்வேறு துறையில் பிரபலங்கள் மற்றும் பேஷன் துறை வல்லு நர்கள் முன்னிலையில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினார்கள்.
தேர்வு
அன்றைய நிகழ்ச்சியின் உடை கட்டுப்பாடாக ஜீன்ஸ் மற்றும் டி-ஷர்ட் இருந்தது. இதில் பங்கேற்றவர்கள் இந்த உடைகளை அணிந்து அழகாக நடந்து வந்தனர்.
அவர்களின் நடை, அவர்களின் திறமை, ஆளுமை ஆகியவற்றின் அடிப்படையில் அவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
இதன் நடுவர்களாக சென்னை, டார்லின்ஸ் புரொடக்ஷன்ஸ் உரிமையா ளர் அஜ்மல் முகமது, மிஸ்டர் தமிழ்நாடு பட்டம் பெற்றவரும், நடிகருமான அண்ணாமலை, டார் லின்ஸ் புரொடக்ஷன்ஸ் பிராண்ட் தூதர் பிரியா, மிஸ்டர் இந்தியா சூப்பர் நேஷனல் இறுதிப் போட்டி யாளர் முகேஷ் ரவி மற்றும் நடிகரும் நிகழ்ச்சி தொகுப்பாளருமான பப்பு ஆகியோர் இருந்தனர்.
நடுவர்கள் மற்றும் பார்வையாளர்கள் இதில் பங்கேற்றவர்களின் திறமைகளை பாராட்டி அவர்களை உற்சாகப்படுத்தினார்கள். இதன் இறுதிச் சுற்றுப் போட்டி ஏப்ரல் 8 அன்று நடைபெற உள்ளது.
இந்த போட்டியை சவீதா ஆர்க்கிடெக்சர் அன்ட் டிசைன் கல்லூரியுடன் இணைந்து டார்லின்ஸ் புரொடக்ஷன்ஸ் நடத்த உள்ளது.