fbpx
Homeபிற செய்திகள்பிஎஸ்ஜிஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா

பிஎஸ்ஜிஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றம் துவக்க விழா

கோவை பிஎஸ்ஜிஆர்.கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி மாணவர் மன்றத் தொடக்க விழா பிஎஸ்ஜி ஆர்கேசி முன்னாள் மாணவர் பொன் விழா அரங்கத்தில் நடைபெற்றது.
மாணவர் மன்றத்தின் ஆண்டு செயல்பாடுகளின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், பிரமுகர்கள் மற்றும் மாணவர் மன்ற உறுப்பினர்கள் குத்து விளக்கு ஏற்றினர்.

பின்னர், கல்லூரியின் தலைவர் டாக்டர் நந்தினி விழாவிற்கு வருகை தந் திருந்த பிரமுகர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை வரவேற்று மாணவர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித் துக் கொண்டார்.
மன்ற உறுப்பினர்களி டையே ஒற்றுமை மற்றும் அர்ப்பணிப்பு உணர்வை நிலை நிறுத்துவதற்கான உறுதி மொழியைக் கல்லூரி முதல்வர் முனைவர் ஆரதி செய்து வைத்தார்.


விழாவிற்குக் கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட் சியர் சங்கீத் பல்வந்த் வாகே சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.

மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறந்து விளங்க உதவும் உடல் தகுதி, மன உறுதி மற்றும் அறிவுசார் கூர்மை பற்றி அவர் எடுத்துரைத்தார்.
ஆர்.கார்த்திகேயன் (மூத்த இயக்குநர் மற்றும் மையத் தலைவர், கேப் ஜெமினி, கோவை) சிறப்புரை ஆற்றினார்.
செயற்கை நுண்ணறிவு சகாப்தத்தில் மாற்றம் மற் றும் புதுமைகளை இயக் குவதில் இளைஞர்களின் பங்களிப்பை அவர் வலியு றுத்தினார்.
மாணவர் மன்றத் தலைவர் ஐகோ ஜாய்சன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img