கோவை பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியும் யுஜிசி நிதியுதவி பெற்ற மகளிர் படிப்பு மையம் கே.சி. டபிள்யூ – கேர்ஸ் ஆற்றல் ஆய்வு மையம், கே. சி. டபிள்யூ ரோட்டராக்ட் கிளப் – ஃபைன் ஆர்ட்ஸ் கிளப், ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியுடன் இணைந்து சந்திரா கருத்தரங்கக் கூடத்திலும் பிஎஸ்ஜிஆர் கே.சி.முன்னாள் மாணவர் பொன்விழா அரங்கத்திலும் “யுவதி 26” என்னும் பெயரில் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டங்களை நிகழ்த்தியது

நண்பகல் நடைபெற்ற இந்நிகழ்வில் பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலர் டாக்டர் நா.யசோதா தேவி வரவேற்புரை நல்கினார். ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் ஆர்.டி.என். டாக்டர் ஜி.சுரேஷ் தலைமையுரை ஆற்றினார்.
பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் இணைப் பேராசிரியரும் ஆற்றல் ஆய்வு மையத்தின் ஒருங்கிணைப்பாளருமான டாக்டர் சி.ஷர்மிளா மதிப்பீட்டில் “எரிசக்தி துறையில் எல்லைப் புறத்தில் பெண்கள்: தலைமைத்துவ சவால்கள் மற்றும் தாக்கம் என்னும் தலைப்பில் குழு விவாதம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் குழு உறுப்பினர்களாக கோவை ஸ்வெலெக்ட் எனர்ஜி சிஸ்டம்சின் உற்பத்தி இயக்குனர் மிருணாளினி செல்லப்பன், சென்னை தியானோ நிறுவன தொழில்நுட்ப இயக்குனர் வனஜாம்பிகா ஜெயக்குமார், கோவை கேர்ஸ் ரெனவயபிள்ஸ் இயக்குனர் சரண்யா ரகுராம், கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் கல்விப்புல முதன்மையர் டாக்டர் கே.எஸ்.சுஜாதா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ரோட்டரி கோயமுத்தூர் சிட்டி செயலாளர் எம்.முருகன் நிகழ்வு குறித்த பாராட்டுரையை வழங்கினார். விழாவின் நிறைவாக கல்லூரியின் விமன்ஸ் ஸ்டடிஸ் துறையின் இணைப் பேராசிரியர் டாக்டர் எம்.ஜெயமாலா நன்றி கூறினார்.
மகளிர் தினக் கொண்டாட்டத்தின் அடுத்த நிகழ்வானது நண்பகல் 2 மணியளவில் பிஎஸ்ஜிஆர் கே.சி. முன்னாள் மாணவர் பொன்விழா அரங்கத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் தொடக்க மாக பிஎஸ்ஜிஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் செயலர் டாக்டர் நா.யசோதா தேவி வரவேற்புரை ஆற்றினார்.
புதுமையான பாடத்திட்டம் மற்றும் கல்வி வடிவமைப்பு ஆலோசகர் உளவியலாளர் மற்றும் ஆசிரியர் ஆர்த்தி சி ராஜரத் தினம் மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து சிறப்புரையாற்றினார்.

பள்ளிக்கல்வித் துறையின் சமக்ர சிக்ஷா மற்றும் பிசியோதெரபிஸ்ட் ஆலோசகர் டாக்டர் எஸ்.மதனகோபால் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறந்த பெண்மணிகளுக்கு WoW விருதுகளை வழங்கினார்.
ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் ஆர்.டி.என் டாக்டர் ஜி.சுரேஷ் பாராட்டி பேசினார். நிகழ்ச்சியின் நிறைவாக பி.எஸ்.ஜி.ஆர் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியின் முதல்வர் டாக்டர் பி.பீ ஆரதி நன்றியுரை வழங்கினார்.
இந்நிகழ்வினைத் தொடர்ந்து கே.சி. டபிள்யூ மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பின்னணிப் பாடகர் ஆபிரகாம் நித்ய பாண்டியன் பாடல்களைப் பாடி அனைவரையும் மகிழ்வித்தார்.
அதனைத் தொடர்ந்து டிஜே நிகழ்ச்சியும் நடை பெற்றது. டாக்டர்கள் எம்.ஜெய மாலா, ஜெ.ஷீலா, சி.ஷர்மிளா, எஸ்.கீதா, இரா.சுஜாதா ஆகியோர் கே.சி டபிள்யூவின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகச் சிறப்பாகச் செயலாற்றினர்.
ரோட்டரி கோயம்புத்தூர் சிட்டியின் தலைவர் டாக்டர் ஜி.சுரேஷ், செயலாளர் எம். முருகன், திட்டத்தலைவர் ஆர்.ஜெகன்மோகன், திட்டத்துணைத் தலைவர் டாக்டர் எம்.கலைவாணி ஆகியோரின் வழிநடத்துதலோடு விழா நிறைவடைந்தது.



