சிதம்பரம் ரோட்டரி சங்கம், டாக்டர் சபா நாயகம் நினைவு அறக் கட்டளை இணைந்து நடத்திய தையல் பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
சிதம்பரம் பள்ளிப்படை இப்ராஹிம் நகர் ரோட்டரி ஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சிதம்பரம் ரோட் டரி சங்க தலைவர் வி.அருண் தலைமை வகித்தார்.
தலைமை அறங்காவலர் பேராசியர் எஸ்.நடனசபாபதி தையல் பயிற்சி திட்டம் பற்றி எடுத்துரைத்தார். ரோட்டரி மாவட்ட முன்னாள் ஆளுநர்கள் ஆர்.கேதார் நாதன், டாக்டர் எஸ்.அருள்மொழிச்செல்வன், மண்டல துணை ஆளுநர் பேராசிரியர் திரு ஞானசம்பந்தம் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
சிறப்பு விருந்தினராக ரோட்டரி மாவட்ட ஆளுநர் எஸ்.பாஸ்கரன் கலந்து கொண்டு பயிற்சி பெற்ற பெண்களுக்கு சான்றிதழ்களும், தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பயனாளிகளுக்கு தையல் இயந்திரங்களும் வழங்கிப் பேசினர்.
நிகழ்ச்சியை முன்னாள் தலைவர் இ.மஹபூப் உசேன் தொகுத்து வழங்கினார். விழாவில் முன்னாள் தலைவர்கள் அழகப்பன், ரத்தின சபேசன்,சக்திவேல், சோனா பாபு மற்றும் மிட்டவுன், டெம்பிள் டவுன், சென்ட்ரல் ரோட்டரி சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
முன்னதாக சி.சந்திரசேகர் இறைவணக்கம் பாடினார். முடிவில் செயலர் டாக்டர் பாலாஜி சுவாமிநாதன் நன்றி கூறினார்.