fbpx
Homeபிற செய்திகள்கலிபோர்னியாவின் பாதாம் வாரியம் சார்பில் புரோட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கலிபோர்னியாவின் பாதாம் வாரியம் சார்பில் புரோட்டின் அவசியம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவையில் கலிபோர்னியா பாதாம் வாரியம் சார்பில் புரோட்டின் சத்தின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.

ஒவ்வொருவரின் ஆரோக்கி யமான வாழ்க்கைக்கும் புரோட்டின் சத்து மிகவும் அவசியம். இந்தியாவில் பலரும் புரோட்டின் பற்றாக்குறையால் அவதியுற்று வருகின்றனர். இந்த குறைபாட்டை தவிர்க்க, தினமும் ஒரு கைப்பிடி பாதாமை எடுத்துக்கொள்வது சிறந்த வழியாகும்.

புரோட்டின் எடுத்துக் கொள்வதன் அவசியத்தை மக்களுக்கு உணர்த்தும் வகையில் கலிபோர்னியாவின் பாதாம் வாரியம், ‘இந்தியாவின் புரோட்டின் பிரச்சினையைப் போக்க ஒரு இயற்கையான அணுகுமுறை’ எனும் நிகழ்ச்சியை நடத்தியது.

கோவை ‘ஜோன் பை தி பார்க்‘ ஹோட்டலில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஊட்டச்சத்து நிபுணரும், ஆரோக்கிய ஆலோசகருமான ஷீலா கிருஷ்ணசாமி, வானொலி நிகழ்ச்சி தொகுப்பாளர் ஸ்ருதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், ஷீலா கிருஷ்ணசாமி பேசுகையில், ‘’புரோட்டீனை எடுத்துக் கொள்வது என்பது நமது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் முக்கியமானதாகும். புரோட்டீன் சத்து கொட்டை வகைகள், விதைகள், பருப்பு வகைகள், முட்டை, கோழி மற்றும் மீன் ஆகியவற்றில் அதிக அளவில் உள்ளது.

சைவ உணவு சாப்பிடுபவர்கள் சோயாபீன்ஸ், பருப்பு வகைகள், பாதாம் போன்ற கொட்டை வகைகள் மூலம் புரோட்டின் சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். 30 கிராம் பாதாம் பருப்பு 6.3 கிராம் புரோட்டீனை வழங்குகிறது.

ஜிங்க், இரும்பு, மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் ‘ஈ’ மற்றும் வைட்டமின் ‘பி2’ போன்ற சத்துக்களும் பாதாமில் உள்ளன’’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img