fbpx
Homeபிற செய்திகள்உலகளாவிய பிராண்ட் அடையாளம் நடவடிக்கை ‘டைஸிஸ்’ இனி ‘டெக்சியன் இந்தியா’

உலகளாவிய பிராண்ட் அடையாளம் நடவடிக்கை ‘டைஸிஸ்’ இனி ‘டெக்சியன் இந்தியா’

உலகளாவிய பிராண்ட் அடையாளமாக உருவெடுக்கும் வகையில் பணியாளர் தீர்வுகளை வழங்கும் ‘டைஸிஸ்’ நிறுவனம் இனி ‘டெக்சியன் இந்தியா’ என அழைக்கப்பட உள்ளது.

இந்தியாவில் ‘டெக்சியன்’ செயல்பாடுகள் கடந்த 2011-ல் தொடங்கியது. கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலான செயல்பாடு மற்றும் நிபுணத்துவத்துக்குப் பிறகு இந்நிறுவனம் தற்போது சென்னை, நொய்டா, பெங்களூரு, புணே மற்றும் மும்பையில் அலுவலகங்களைக் கொண்டுள்ளது.

தற்போது 1500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் இந்நிறுவனத்தில் பணிபுரிகின்றனர். இந்தியாவின் மிகப்பெரிய பணியாளர் நிறுவனங்களில் ஒன்றாக ‘டெக்சியன்’ வளர்ந்துள்ளது.

மேலும், இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான ‘ஃபார்ச்சூன் 100’, ‘ஃபார்ச்சூன் 500’வாடிக்கையாளர் களைக் கொண்டுள்ளது. உலகளாவிய பிராண்ட் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கும்.

இந்தியா உள்பட உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு நிறுவனத்தின் விரிவான பணியாளர்கள் மற்றும் தொழில் தீர்வுகள் கிடைப்பதை வெளிப்படுத்தும் உத்தியாக ‘டைஸிஸ்’ இனி ‘டெக்சியன் இந்தியா’ என்ற பெயரில் அழைக்கப்பட உள்ளது.

‘டெக்சியன் இந்தியா’ நிறுவனத்தின் இந்திய செயல்பாடுகளை அதன் தலைவர் குமார் ராஜகோபாலன் வழி நடத்துகிறார். இந்நிறுவன செயல்பாடுகள் குறித்து ‘டெக்சியன் இந்தியா’ சிஇஓ மரூஃப் அஹ்மத்,கூறுகையில், ‘’நவீன தொழில்களுக்கு புதிய வேலை முறைகள் மற்றும் தொழில் செய்வதற்கான சிறந்த வழிகளுக்கு விரிவான, புதுமையான தீர்வுகள் தேவை.

எங்கள் குழுக்கள் ‘பிளாக் ஸ்கை திங்கிங்க்‘ முறையப் பயன்படுத்தி மாற்றத்தை ஏற்படுத்தவும், வாடிக்கையாளர் தொழில் நிறுவனங்கள் சிறப்பாக செயல்படவும் புதிய தீர்வுகளை உருவாக்க உதவுகின்றன’’ என்றார்.

படிக்க வேண்டும்

spot_img