திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தர்ப்பகராஜ் திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலை சுற்றியுள்ள மாடவீதிகளில் நெடுஞ்சாலைத்துறை சார்பாக கான்கிரீட் தளம் மற்றும் மாநகராட்சி சார்பாக கழிநீர் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெற்றதை ஆய்வு மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோவில் மாடவீதியில் நெடுஞ்சாலைத்துறை மூலம் முதற்கட்டமாக ரூ.17 கோடி மதிப்பீட்டில் நவீன இயந்திரம் கொண்டு கான்கிரீட் சாலை அமைக்கப்பட்டது.
தொடர்ந்து இரண்டாவது கட்டமாக ரூ.15 கோடி மதிப்பீட்டில் 17 கிமீட்டர் தொலைவிற்கு கான்கிரீட் சாலை அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.
இப்பணியை திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு பணிகள் விரைவாகவும் தரமாகவும் மேற்கொள்ளப்பட்டு வருகிறதா என்பதை கண்காணித்து வருகிறார்கள்.
அதன்படி மாடவீதிகளை சுற்றி நெடுஞ்சாலை துறை மூலமாக கான்கிரீட் சிமெண்ட் சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் மாநகராட்சி சார்பாக மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருவதையும் கள ஆய்வு மேற்கொண்டதில் 80% பணிகள் முடித்துள்ளது.
மீதம் எஞ்சியுள்ள பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் துரிதமாகவும் தரமாகவும் விரைந்து முடிக்க வேண்டுமென துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின்போது மாநகராட்சி ஆணையர் செல்வபாலாஜி மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.



