காட்டுமன்னார்கோவில் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறையில் ரூசா நிதி உதவியுடன்“The rise of Gigpreneurs” என்ற தலைப்பில் தொழில் முனைவோர் குறித்த இரண்டு நாள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை கல்லூரி கருத்தரங்க கூடத்தில் நடைபெற்றது. பயிற்சி பட்டறைக்கு கல்லூரி முதல்வர் சே.மீனா தலைமை வகித்து உரையாற்றினார்.
வணிக வியல் துறை தலைவர் தேவநாதன், கல்லூரியின் கணிதத்துறை தலைவர் பூபாலன் மற்றும் தமிழ் துறை தலைவர் சிற்றரசு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்த பயிற்சி பட்டறை ஒருங்கிணைப்பாளரான வணிகவியல் துறை பேராசிரியர் சுப்புலட்சுமி வரவேற்புரை ஆற்றினார்.
விழாவில் தமிழ்ஜோதி, சுனில் ஜஸ்டஸ், சுமதி, தொழில்முனைவர் விதுபாலா, விக்னேஷ், தனசெல்வன் ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினர்.
இக்கருத்தரங்கில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் தொழில் முனை வோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு தொழில் தொடங்கும் யுக்திகளையும் அதற்கான வழிமுறைகளையும் விரிவாக விளக்கினார்கள்.
இக்கல்லூரியில் பயிலும் மாணவ மாணவிகள் மற்றும் அருகாமை யில் உள்ள சி.முட்லூர் அரசு கலைக் கல்லூரி, மணல்மேடு அரசு கலைக் கல்லூரி, புத்தூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் எம்ஆர்கே கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர். யோகலட்சுமி நன்றி கூறினார்.
விழாவினை வணிகவியல் துறை உதவி பேராசிரியர் ஜோதி மற்றும் கௌரவ விரிவுரையாளர்கள் விஜய நீலமேக வர்மன் மற்றும் ராஜசேகர் ஒருங்கிணைத்து பயிற்சி பட்டறைக்கான ஏற்பாடுகளை செய்தனர்.
முடிவில் கலந்து கொண்ட அனைத்து மாணவ மாணவிகளுக்கும் பங்கேற்பு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.



