fbpx
Homeபிற செய்திகள்ஆபரேஷன் சிந்தூருக்கு பின்புல ஆதரவு வழங்கிய முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு விருது

ஆபரேஷன் சிந்தூருக்கு பின்புல ஆதரவு வழங்கிய முன்னாள் இராணுவ அதிகாரிகளுக்கு விருது

சமீபத்திய “ஆபரேஷன் சிந்தூர்” நம் நாட்டின் வெற்றிக்கும், புகழுக்கும் பின்புல ஆதரவை வழங்கிய குரல்களுக்கு சொந்தக்காரர்களான ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகளை ஷரான் பிளை நிறுவனத்தின் வருடாந்திர நிகழ்வான “ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்” ஆறாவது பதிப்பு கௌரவித்திருக்கிறது.

இந்த நிகழ்வில், லெப்டினன்ட் ஜெனரல்கள் ஹரிமோகன் ஐயர், துஷ்யந்த் சிங், சங்கர், மேஜர் ஜெனரல் ராஜிவ் நாராயணன் (ஓய்வு) ஆகியோரை “ஐ ஆம் ஸ்ட்ராங்கஸ்ட்” விருதுகள் மூலம் ஷரோன் பிளை கௌரவித்திருக்கிறது.

இராணுவத்திலும் மற்றும் ஆராய்ச்சியிலும் முதுநிலை பொறுப்புகளோடு தேசத்திற்கு முக்கியப் பங்களிப்புகளை வழங்கிய இவர்கள் இப்போது சிறப்பான பாதுகாப்பு பகுப்பாய்வாளர்களாக தங்கள் பங்களிப்பை தொடர்ந்து வழங்கி வருகின்றனர்.

ஷரான் பிளை நிறுவனத்தின் நிறுவனர் விஷ்ணு கெமானி இந்நிகழ்வில் பேசுகையில்,

“தற்போது விருதுபெறும் இந்த முன்னாள் இராணுவ தளபதிகள் மற்றும் ஆராய்ச்சி நிபுணர்கள் பணியிலிருந்து ஓய்வு பெறவில்லை. தாங்கள் தேசத்திற்காக சீருடையிலிருந்து ஆற்றிய சேவையை இப்போது மறுவரையறை செய்திருக்கின்றனர்.
உலகமே நமது இராணுவ வீரர்களை பாராட்டுகின்றனர்” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img