ஈரோடு மாவட்ட அளவிலான ‘ஈரோபெக்ஸ் 2026 & அஞ்சல் தலைகளின் திருவிழா’ கண்காட்சியை மாவட்ட ஆட்சியர் ச.கந்தசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்திய அஞ்சல் துறையின் ஈரோடு கோட்டம், மேற்கு மண்டலம், தமிழ்நாடு வட்டம் சார்பில் திண்டல் பெருந்துறை சாலையில் உள்ள
ஆலயமணி மஹாலில் இந்த இரண்டு நாள் கண்காட்சி நடைபெறுகிறது.
பல்வேறு கருப்பொ
ருள்களின் அடிப்படையில் சேகரிக்கப்பட்ட அரிய மற்றும் அழகிய அஞ்சல் தலைகள் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. பள்ளி மாணவர்களுக்கான கடிதம் எழுதுதல், ஓவியப் போட்டிகளின் இறுதிச்சுற்றுகளும் நடைபெற்றன.
மாணவர்களின் அறிவாற்றல் மற்றும் படைப்பாற்றலை ஊக்
குவிக்கும் வகையில் 3டி காட்சிகள், நடமாடும் கோளரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்
பட்டன. ஈரோடு மாவட்டத்தின் வரலாறு, பாரம்பரியம் மற்றும் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில், பண்ணாரி மாரியம்மன் கோயில், காலிங்கராயன் அணைக்கட்டு மற்றும் ‘ஈரோட்டின் பொக்கிஷங்கள்’ தொடர்பான பட அஞ்சல் அட்டைகளையும் வெளியிட்டார்.
கண்காட்சியின் இரண்டாம் நாளான வியாழக்கிழமை (நவம்பர் 26) வினாடி வினா போட்டியின் இறுதிச்சுற்று, 3டி காட்சி, நடமாடும் கோளரங்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
வெள்ளோடு பறவைகள் சரணாலயம், கே.எஸ்.ஆர். பொறியியல் கல்லூரி, எஸ்.பி.கே. கல்வி அறக்கட்டளை ஆகியவற்றின் சிறப்பு அஞ்சல் அட்டைகளும் வெளியிடப்பட உள்ளன.
நிகழ்ச்சியில் ஈரோடு கோட்ட முதுநிலை அஞ்சல் கண்காணிப்பாளர் கே.கோபாலன், கோவை மண்டல அலுவலக உதவி இயக்குநர் ஜெய கீதா, ரயில்வே மெயில் சர்வீஸ் கண்காணிப்பாளர் ஜெயராஜ் பாபு, திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் பட்டாபிராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



