fbpx
Homeபிற செய்திகள்மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கார்டுக்கு 10 ஆயிரம் வழங்கவேண்டும்- பிரேமலதா விஜயகாந்த் விமான...

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கார்டுக்கு 10 ஆயிரம் வழங்கவேண்டும்- பிரேமலதா விஜயகாந்த் விமான நிலையத்தில் பேட்டி

மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ரேஷன் கார்டுக்கு 10 ஆயிரமும், விவசாயிகளுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும் தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தூத்துக்குடி விமான நிலையத்தில் பேட்டி அளித்தார்.

தென்காசியில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையம் வருகை தந்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
டெல்டா மாவட்டங்களில் மழை வெள்ளத்தினால் மிகப்பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. விளைநிலங்கள் அனைத்தும் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. அனைத்து இடங்களிலும் மழை வெள்ளம் சேரும், சகதியுமாக அதிகமாக இருக்கிறது. ஆனால் முதல்வர் வீண் விளம்பரம் தேடிக்கொள்கின்றார்.

விழுப்புரத்தில் அமைச்சர் பொன்மடி மீது சேரை வாரி வீசி இருக்கின்றார்கள். திமுக பேனர்கள் கிழிக்கப்பட்டிருக்கிறது.. ஒட்டுமொத்த மக்களும் ரோட்டில் உட்கார்ந்து மறியல் செய்து இருக்கின்றார்கள்.. அந்த அளவுக்கு ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது.

இதனை எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டதான் செய்வார்கள். இதனை ஏற்றுக் கொண்டு உடனடியாக சரி செய்ய வேண்டும். பாலாறு தேனாறு ஓடுகிறது என கூற வேண்டும் என்று எதிர்பார்த்தால் இதனை மக்கள் தான் கூற வேண்டும்..

மக்களுக்கு, 2000 ஒரு நாளைக்கு காணாது. சிறிய மாநிலமான பாண்டிச்சேரி 5000 ரூபாய் அறிவித்திருக்கின்றார்கள். ஆகவே தமிழக அரசு ரேஷன் கார்டுக்கு 10 ஆயிரம் ரூபாயும் விவசாயிகளுக்கு 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாய் வரையும் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உடன் மாவட்ட கழக செயலாளர்கள் சுரேஷ், தயாள லிங்கம், மாநில நிர்வாகிகள் நடிகர் மீசை ராஜேந்திரன், வக்கீல் சுப பிரியா ஆகியோர் இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img