fbpx
Homeபிற செய்திகள்கோவை மத்திய சிறையில் சிறைவாசிகள், உறவினர்களுடன் பேசுவதற்கு வீடியோ கால் வசதி: அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார்

கோவை மத்திய சிறையில் சிறைவாசிகள், உறவினர்களுடன் பேசுவதற்கு வீடியோ கால் வசதி: அமைச்சர் ரகுபதி தொடங்கிவைத்தார்

கோவையில் சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் பேச “காணொளி தொலைபேசி வசதி மற்றும் சிறைவாசிகளின் கற்றல் திறன் மற்றும் வாசிப்புத் திறனை ஊக்குவித்திட புனரமைக்கப்பட்ட சிறை நூலகம் ஆகியவற்றை சட்டம் – நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

கோவை மத்திய சிறைச்சாலையில் சிறைவாசிகள் அவர்களது உறவினர்களுடன் பேசுவதற்கு “காணொளி தொலைபேசி” வசதி மற்றும் சிறைவாசிகளின் கற்றல் திறன் மற்றும் வாசிப்புத் திறனை ஊக்குவித்திட புனரமைக்கப்பட்ட சிறை நூலகம் ஆகியவற்றை சட்டம், நீதி, சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை தலைமை இயக்குநர் மகேஷ்வர் தயாள், கோவை சரக சிறைத்துறை துணைத் தலைவர் சண்முகசுந்தரம், சிறைகண்காணிப்பாளர் செந்தில்குமார் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பின்னர் சிறப்பு எழுத்தறிவு திட்டத்தின் கீழ் தேர்ச்சி பெற்ற 3 சிறைவாசிகளுக்கும் ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்ற 3 சிறைவாசிகளுக்கும். எலக்ட்ரிக்கல் மற்றும் பிளம்பிங் பயிற்சி பெற்ற 3 சிறைவாசிகளுக்கும் சான்றிதழ்களை அமைச்சர் ரகுபதி வழங்கினார்.

படிக்க வேண்டும்

spot_img