fbpx
Homeபிற செய்திகள்சதுரங்கம் - கேரம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

சதுரங்கம் – கேரம் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு

சிதம்பரம் ஸ்ரீ குருஞான சம்பந்தர் மிஷன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா ஆண்டினை முன்னிட்டு சிதம்பரம் நகரில் சுற்றியுள்ள அனைத்துப் பள்ளிகளுக்கு இடையான சதுரங்கம் மற்றும் கேரம் போட்டிகள் நடத்தப்பட்டன அதில் 40 பள்ளிகள் மற்றும் 420 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

விழாவிற்கு பள்ளி நிர்வாகக் குழுத் தலைவர் சுவேதகுமார் தலைமை ஏற்று வரவேற்றுப் பேசினார். பள்ளி செயலர் சேதுசுப்பிரமணியன் வாழ்த்துரை வழங்கினார். மற்றும், போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சிதம்பரம் ரோட்டரி சங்கத் தலைவர் அருண் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்கினார்.

போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக கேடயம், பதக்கம் போன்றவைகளுக்கு ரூ.15 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கினார்கள். பள்ளி முதல்வர் ஜெயக்குமார் நன்றி கூறினார்.ஆசிரியைகள் முன்னிலை வகித்தனர் துணை முதல்வர் ராஜேஸ்வரி தொகுத்து வழங்கினார்.

பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் ஜெயக்குமார், மணிகண்டன் ஆகியோர் ஏற்பாடுகள் செய்து இருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img