fbpx
Homeபிற செய்திகள்காரமடையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைத்த போலீசார்

காரமடையில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல் வைத்த போலீசார்

காரமடை பகுதிகளில் சட்டவிரோத மாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நேற்று காவல் ஆய்வாளர் ராஜசேகரனுக்கு தகவல் வந்தது.

இதனையடுத்து உணவு பாதுகாப்பு அலுவலர் ஆதி கோபாலகிருஷ்ணன் முன்னிலையில் மற்றும் காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் தேவராஜ் மற்றும் தலைமை காவலர் கார்த்திகேயன் ஆகியோர் கிட்டாம்பாளையம், குரும்பனூர், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, தேக்கம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை மற்றும் பெட்டி கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 6 மளிகை மற்றும் பெட்டிக்கடைகளை பூட்டி அதி காரிகள் சீல் வைத்தனர். அதில் கிட்டாம்பாளையம். தோலம்பாளையம், காரமடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் செயல்பட்டு வரும் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு கடை முன்பு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

மேட்டுப்பாளையம் &- ஊட்டி சாலையில் பெட்ரோல் பங்க் அருகே மஜித் தெருவை சேர்ந்த சையது இப்ராஹிம் (37) என்பவர் நடத்தி வரும் பெட்டிக்கடையில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்த மேட்டுப்பாளையம் போலீசார் அவரிடமிருந்து 7.6 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறி முதல் செய்தனர்.

படிக்க வேண்டும்

spot_img