Homeபிற செய்திகள்பொள்ளாச்சியில் காவல்துறை நடத்திய கொடி அணிவகுப்பு

பொள்ளாச்சியில் காவல்துறை நடத்திய கொடி அணிவகுப்பு

கோவை மாவட்ட காவல்துறை சார்பாக பொள்ளாச்சி பகுதியில் மாவட்ட கண்காணிப் பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் கொடி அணிவகுப்பு நடைபெற்றது.

கோவை மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல்-2024 பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் தலைமையில் பொள்ளாச்சியில் மாவட்ட காவல்துறையினர், ஊர்க்காவல் படையினர் மற்றும் மத்திய பாதுகாப்பு படையினர் என சுமார் 462 நபர்கள் இணைந்து கொடி அணிவகுப்பு மேற்கொண்டனர்.

இக்கொடி அணிவகுப்பில் கூடுதல் காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள் மற்றும் உதவி ஆய்வாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img