மேட்டுப்பாளையம் பகுதி கிராமங்களில் நோட்டாவுக்கு தமிழக விவசாய சங்கத்தினர் வாக்கு சேகரித்தனர்.
வன விலங்கு பிரச்சனைக்கு தீர்வு காணாத அரசியல் கட்சிகளை புறக்கணிக்க வீடு வீடாக நோட்டீஸ் விநியோகித்து பிரச் சாரம் செய்தனர்.
கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் காட்டு யானை, மான், சிறத்தை, மயில், காட்டு பன்றி உள்ளிட்ட வன விலங்குகள் காட்டை விட்டு வெளியேறி விளைநிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப் படுத்தி வருவதுடன் மனி தர்களை தாக்கி உயிரிழப்பை ஏற்படுத்தி வரும் சம்பவங்கள் அதிகரித்து வருவதாக இப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இது குறித்து பல முறை வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் என பல முறை புகார் தெரிவித்தும் பலனில்லை என கூறப்படுகிறது.
ஒவ்வொரு தேர்தலின் போதும் வனவிலங்கு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் என வாக்குறுதி மட்டுமே அளிக்கப்படுவதாக தெரிவிக்கும் தமிழக விவசாயிகள் சங்கத்தினர் வரும் நாடா ளுமன்ற தேர்தலில் ஒட்டு மொத்த விவசாயிகள் மற் றும் வனவிலங்குகளால் பாதிக்கப்பட்டும் மக்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தி 17 ஊராட்சிகளுக்கு உட்பட்ட கிராம பகுதிகளில் தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது.
இன்று தாசம்பாளையம் கிராமத்தில் தமிழக விவசாய சங்க தலைவர் வேணுகோபால் தலைமையில் விவசாயிகள் கிராம மக்களை நேரில் சந்தித்தும் வீடு வீடாக சென்றும் துண்டு பிரசுரங்கள் வழங்கி நோட்டாவுக்கு வாக்கு சேக ரிப்பில் ஈடுபட்டனர்.
நீலகிரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட மேட் டுப்பாளையம் மற்றும் ஆறு சட்டமன்ற தொகுதியிலும் மக் களை சந்தித்து நோட்டாவுக்கு ஆதரவு திரட்ட உள்ளதாக தெரிவித்தனர்.