fbpx
Homeபிற செய்திகள்எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கவிஞர் அருணாச்சலத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் கவிஞர் அருணாச்சலத்தின் கவிதை நூல் வெளியீட்டு விழா

எஸ்.ஆர்.எம். நிறுவன வேந்தரின் செயலாளர் மற்றும் எஸ்டேட் அதிகாரி யான கவிஞர் இரா‌. அருணாச்சலம் எழுதிய தன்னுடைய மூன்றாவது கவிதை நூலின் ‘வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ வெளியீட்டு விழா காட்டாங்குளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிமங்கை சத்தியநாரா யணன் தலைமை ஏற்று நூலை வெளியிட, நூலாசிரியரின் தாயார் சுகன்யா இராஜேந்திரன் முதற்படியைப் பெற்றுக்கொண்டார். தமிழ் திரைப்பட இயக்குநர் லிங்குசாமி, கவிஞர் பிருந்தா சாரதி மற்றும் எழுத்தாளர் பிருந்தா சீனிவாசன் ஆகியோர் நூல் குறித்துத் திறனாய்வு செய்தனர்.
இந்நிகழ்வில், தமிழ்ப்பேராயத்தின் தலைவரான கரு. நாகராசன், “மிகச் சிறந்த கவிதை நூலுக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் இந்த கவிதை தொகுப்பில் உள்ளது” என்றார்.

எஸ்.ஆர்.எம். குளோபல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிமங்கை சத்தியநாராயணன் “இந்த இளம்வயதில் மூன்றாவது கவிதை தொகுப்பு வெளியிட்டிருப்பது, மாணவர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்,” என்றார்.
கவிஞர் மற்றும் திரைப்படங்களின் வசனகர்த்தாவான பிருந்தா சாரதி, “வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ கவிதை தொகுப்பில் காதல் கவிதைகளை விட சமுதாயத்தை பற்றி வருந்தி எழுதிய கவிதைகளே அதிகம்,” என்றார்.
தமிழ்திசை இணையாசிரியை மற்றும் எழுத்தாளரான பிருந்தா ஸ்ரீனிவாசன், “காதல் என்ற பெயரில் வன்முறையை கையாளும் திரைப்படங்கள், மற்றும் சமூகம் மத்தியில் பொறுமையுடன் தனது காதலை கவிதை தொகுப்பில் கூறியிருக்கிறார்,” என்றார்.

இயக்குநர் லிங்குசாமி “அருணாச்சலம் ஒரு மிக அற்புதமான மனிதர்; இந்த உலகத்தில் நீங்கள் தனித்து தெரியவேண்டும் என்றால் கல்வி கற்க வேண்டும்,” என்று கூறினார்.
இவரைத் தொடர்ந்து கவிஞர் அருணாச்சலம், “எல்லோரும் பாராட்டிய ‘வருகைப் பதிவேட்டில் உன் பெயர் இல்லை’ என்ற கவிதையின் தலைப்பையே தொகுப்பின் பெயராக வைக்குமாறு கவிஞர் பழனிபாரதி கூறியதற்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்”என்று கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img