fbpx
Homeபிற செய்திகள்பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் அம்ரித் குடிநீர் திட்டம் தொடக்க விழா

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் அம்ரித் குடிநீர் திட்டம் தொடக்க விழா

பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் சீரான குடிநீர் வழங்கும் வகையில் அமிருத் 2.0 திட்டத்தின் தொடக்க விழா திங்கட்கிழமை நடந்தது.

பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளுக்கும் தொடர்ந்து சீரான குடிநீர் வழங்கும் வகையில் ரூபாய் ரூ.20 கோடி செலவில் அனைத்து வீடுகளுக்கும் புதிதாக குடிநீர் குழாய் இணைப்புகள் தரப்பட உள்ளன.

இதற்காக அனைத்து தெருக்களிலும் புதிய குழாய்கள் பதிக்கப்படு வதோடு, தலா 3 லட்சம் லிட்டர் கொள்ளளவுள்ள இரண்டு கீழ்நிலைக் குடிநீர் சேமிப்பு தொட்டிகளும்,ஒரு மேல்நிலைக் குடிநீர் சேமிப்பு தொட்டியும் கட்டப்படுகின்றன.

பெரியநாயக்கன்பாளை யம் பேரூராட்சி மன்ற அலுவலகத்திற்கு முன்பு நடந்த இத்திட்டத்தின் தொடக்க நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்ற தலைவர் வெ.விஸ்வபிரகாஷ் தலைமை வகித்தார்.

செயல் அலுவலர் நந்தகுமார், துணைத்தலைவர் உமாதேவி பழனிச்சாமி, வார்டு கவுன்சிலர் ஜனனி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் அ. ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு திட்டப் பணிகளை தொடக்க வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் நா. கார்த்திக், நரசிம்மநாயக்கன்பாளை யம் பேரூராட்சி மன் றத்தின் முன்னாள் தலைவர் வீரபத்திரன், பெரியநாயக்கன் பாளையம் பேரூராட்சியின் அனைத்து வார்டு கவுன்சிலர்கள், பேரூராட்சி பொறியாளர் சதீஷ்குமார், துப்புரவு ஆய்வாளர் பரமசிவம், பேரூராட்சி குடிநீர் பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img