கோவையைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான பிஎன்சி மோட்டார்ஸ் ‘இன் டோஷெல் பிஎன்சி’ என் னும் பெயரில் முதல் அனுபவ மையத்தை கோவையில் திறந்துள்ளது.
சுங்கம் பைபாஸ் சாலையில் அமைந்துள்ள இந்த மையத்தை இன் டோஷெல் மோல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஜெகதீசன் திறந்து வைத்தார்.
பிஎன்சி மோட்டார்ஸ் தலைமை செயல் அதிகாரி அனிருத் ரவி நாராயணன் கூறுகையில், எங்கள் இருசக்கர வாகனங்களில் உள்ள பேட்டரி இந்தியா வில் உள்ள பிற இரு சக்கர வாகனங்களின் பேட்டரி யைவிட சிறந்ததாகும்.
நவீன தொழில்நுட்பத்தில் மிகவும் புதுமையான சேஸ் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் கட்டமைப்புடன் உலகத் தரத்தில் தயாரிக்கப்படுகின்றன.
மின்சார வாகன உற்பத்தியில் கோவை நகரை உலக அளவில் சிறந்த நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறோம் என்றார்.
தற்போது பிஎன்சி நிறுவனம் பிஎன்சி சேலஞ்சர் எஸ்110 என்ற மோட்டார் சைக்கிளை மட்டுமே தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்நிறுவனம் சமீபத்தில் 2 புதிய வாக னங்களை அறிமுகம் செய் தது. டிசம்பர் மாதம் முதல் விற்பனைக்கு வர உள்ளது.
பிஎன்சி சேலஞ்சர் எஸ்110, 4 சிறப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை 1,18,225 ரூபாய். இது 4 வண்ணங்களில் வருகிறது.
வாடிக்கையாளர் அனுபவ மையம் அனைத்து நாட்களிலும் காலை 9 மணி முதல் மாலை 9 மணி வரை செயல்படும்.
மேலும் தகவலுக்கு, www.bncmotors.in http://www.bncmotors.in/ என்ற இணையதளம் அல்லது +91 9790007107 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.