தனி ஒருவரின் வீட்டுக் கனவை நனவாக்க பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம், நீண்ட கால தொலைநோக்கு பார்வையுடன் எளிமையான கடன் திட்டம் ரோஷிணியை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, தனிநபர்கள் 5 லட்ச ரூபாய் முதல் 30 லட்சம் ருபாய் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம்.
ரோஷிணி திட்டம், சென்னை, கோவை, ஹாசிதாபாத், ஹைதராபாத், இந்தூர், உஜ்ஜைன், லக்னோ, மும்பை, நாக்பூர், புனே, ராஜ்கோட் மற்றும் வாரணாசியில் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தில் வீடு வாங்குதல், சுயமாக கட்டடம் கட்டுதல், வீட்டு விரிவாக்கம், புதுப்பித்தல், புதிய பிளாட் வாங்குதல், கட்டுதல், சொத்துக்கு அடமான கடன் மற்றும் பிற கடன் வசதிகளை பெறலாம்.
விண்ணப்பம் செய்வோர், புதியதாக இருக்கலாம்; சீரற்ற வருவாய் ஈட்டும் சுய தொழில் செய்வோராகவும் இருக்கலாம். மாதந்திர வருவாய் 10 ஆயிரத்துக்கும் குறைவாக உள்ளோர், நடுத்தர வருவாய் உடையோர் இதில் பயன்பெறலாம்.
பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை செயல் அதிகாரி கிரிஷ் கவுஸ்கி பேசுகையில், “குறைவான விலையில் வீடு கட்டுவோருக்கான திட்டத்தை தொடர ரோஷிணி துவக்கப்பட்டுள்ளது. பிஎன்பி ஹவுசிங் பைனான்ஸ் வாடிக்கையாளர்களுடன் நெருங்கி பழக விரும்புகிறது.
எனவே நாட்டின் 2 மற்றும் 3-ம் நிலை நகரங்களிலும் வீட்டு உரிமையாளர்களை உருவாக்கவும் அவர்களது வளர்ச்சியின் தேவைக்காகவும் அடியெடுத்து வைக்கிறோம்.
அனைவருக்கும் வீடு
அனைவருக்கும் வீடு என்ற மத்திய அரசின் திட்டத்திற்கு உறுதுணையாகவும், ரியல் எஸ்டேட் தொழில் வளர்ச்சிக்காகவும் எங்களது கடமையை புதுப்பித்துக் கொண்டுள்ளோம்“ என்றார்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த வணிகத்தில் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெற்றுள்ள நிறுவனம், நாடு முழுவதும் கடன் விநியோக திட்டத்தைக் கொண்டுள்ளது.
வீட்டுக்கடன் வேண்டுவோருக்கு தேடிச் சென்று உதவிடும் நிறுவனமாக திகழ்கிறது. உத்திரப்பிரதேசம், உத்ரகாண்ட், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், தமிழ்நாடு, ஆந்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 15 மாநிலங்கள், டில்லியிலும் வளர்ச்சி பெற்று வருகிறது.



