திருப்பூரில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ பிறந்த நாள் விழா தி பல்வேறு இடங்களில் வடக்கு மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் எம்.எல்.ஏ. மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தங்கராஜ் வழிகாட்டுதலோடு இந்த மாதம் முழுவதும் நடை பெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திருப்பூர் வடக்கு மாவட்டம் வீரபாண்டி பகுதிக்கு உட்பட்ட 57-வது வார்டு இளைஞர் அணி துணை அமைப்பாளர் குமார் ஏற்பாட்டில் அன்ன தானம், பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு பேக் வழங்குதல், குழந்தைக ளுக்கான விளையாட்டுப் போட்டி, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பொதுமக்களுக்கு பாய், போர்வை, தலையணை, துண்டு போன்ற பொருட்கள் வழங்குவது என நல உதவிகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
ரசிகர் நற்பணி மன்றம்
வீரபாண்டி பகுதி கழக செயலாளர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார்.
மேலும் 57 வது வார்டில் உதயநிதி ஸ்டாலின் ரசிகர் நற்பணி மன்றம் பெயர் பலகை திறப்பு விழா நடைபெற்றது.
இதில் நற்பணி மன்ற திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் என்.எஸ்.கே. சிவக் குமார் கலந்து கொண்டு பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் நற்பணி மன்ற தலைவர் பிரகாஷ், செயலாளர் செல்லமுத்து, பொருளாளர் ஜெகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.