கோவை தடாகம் சாலை, சிவாஜி காலனி பகுதியில் அனைத்து சமுக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் சார்பாக முதலாம் ஆண்டு பிபின் ராவத் நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை
கோவை தடாகம் சாலை சிவாஜி கணேசன் பகுதியில் அனைத்து சமூக மக்களுக்கும் உதவும் பேரவை அமைப்பின் நிறுவனத் தலைவர் வழக்கறிஞர் புஷ்பவனம் அலுவலகத்தில், வழக்கறிஞர் புஸ்பாணந்தம் தலைமையில், குன்னூர் பகுதியில் இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிர்நீத்த முப்படைகளின் தளபதி பிபின் ராவத் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் மெழுகுவர்த்தி ஏற்றியும், பிபின் ராவத், திருவுருவப் படத்திற்கு மலர் தூவியும் மரியாதை செலுத்தி தங்களது நினைவஞ்சலியை வெளிப்படுத்தினர்.
இதனை தொடர்ந்து இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் இடையர்பாளையம், பாலகிருஷ்ணன், வழக்கறிஞர் குமாஸ்தாக்கள், லட்சிமி, தேவராஜ், மகேஷ்வரி, ஜெபா என பலரும் கலந்து கொண்டனர்.