கோவை உக்கடம் பேருந்து நிலைய பகுதியில் கோவை மாவட்ட நிர்வாகம், மாநகராட்சி மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், நெகிழிப் பயன்பாட்டைத் தவிர்த்தல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நெகிழி சேகரிக்கும் முகாம் மற்றும் விழிப்புணர்வு பேரணியை மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் துணை மேயர் வெற்றிசெல்வன், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் (கோவை தெற்கு) பியூலா, மாநகராட்சி துணை ஆணையாளர் குமரேசன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொ) நிறைமதி, பொது சுகாதாரக்குழு தலைவர் மாரிசெல்வன், உதவி ஆணையர் செந்தில்குமரன், உதவி நகர்நல அலுவலர் பூபதி, மண்டல சுகாதார அலுவலர்கள் விஜயகுமார், குணசேகரன், கல்லூரி மாணவ, மாணவியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உள்ளனர்.