திருவள்ளுவர் பிறந்த நாளைச் சிறப்பிக்கும் வகையில் ஈரோடு செந்தமிழ் முற்றத்தின் சார்பாக ஈரோடு அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள திருவள்ளுவர் சிலைக்கு முற்றத்தின் தலைவர் கருநல். பன்னீர்செல்வம் நிர்வாகிகள் வெ.செந்தில் குமார் ப குணாளன் மூசா ராஜா ஜூனைதி, தமிழ் ஆர்வலர்கள் அன்பழகன், ராமகிருஷ்ணன், சதாசிவம், சபாபதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருக்குறளை தேசிய நூலாக ஒன்றிய அரசு அறிவிக்க வேண்டும் எனவும் உலக ஐக்கிய நாடு கள் சபை திருக்குறளை உலகப் பொதுமறையாக அறிவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.