fbpx
Homeபிற செய்திகள்திருப்பூரில் 5,186 பேருக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகளுக்கு ஆணை - மாவட்ட ஆட்சியர்...

திருப்பூரில் 5,186 பேருக்கு கலைஞரின் கனவு இல்ல திட்ட பணிகளுக்கு ஆணை – மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன் றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் உள் ளாட்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மனிஷ் நாரணவரே பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார்.
தொடர்ந்தவர் கூறியதாவது:

தமிழ்நாடு முதல்வர் திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்களை அறி வித்து செயல்படுத்தி வரு கிறார். இத்திட்டப்பணிகள் முழுமையாக பொதுமக்களுக்கு சென்றடைவதை உறுதி செய்யும் வகையில் பல்வேறு ஆய்வுப் பணிகளை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

குடிசை இல்லாத தமிழகம் என்ற இலக்கை அடைவதற்காக, 2010-ல், ‘கலைஞர் வீடு வழங்கும் திட்டம்‘ தொடங்கப்பட்டது. தமிழ்நாட்டின் கிராமப்புறங்க ளில் குடிசைகளுக்குப் பதிலாக பாதுகாப்பான நிரந்தர கான்கிரீட் வீடுகள் அமைப்பதற் காக நடவடிக்கை கள் எடுக் கப்பட்டு ஒரு வீட்டிற்கு ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், திருப்பூர் மாவட்டத்தில் கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் அவிநாசி ஒன்றியத்தில் 151 பயனாளிகளுக்கு ரூ.4.68 கோடி மதிப்பீட்டிலும், தாராபுரம் ஒன்றியத்தில் 191 பயனாளிகளுக்கு ரூ.5.92 கோடி மதிப்பீட்டிலும், குடிமங் கலம் ஒன்றியத்தில் 304 பயனாளிகளுக்கு ரூ.9.42 கோடி மதிப்பீட்டிலும், மடத் துக்குளம் ஒன்றியத்தில் 236 பயனாளிகளுக்கு ரூ.7.31 கோடி மதிப்பீட்டிலும், மூல னூர் ஒன்றியத்தில் 146 பயனாளிகளுக்கு ரூ.4.52 கோடி மதிப்பீட்டிலும், பல் லடம் ஒன்றியத்தில் 281 பயனாளிகளுக்கு ரூ.8.72 கோடி மதிப்பீட்டிலும், பொங்கலூர் ஒன்றியத்தில் 136 பயனாளிகளுக்கு ரூ.4.21 கோடி மதிப்பீட்டிலும், குண் டடம் ஒன்றியத்தில் 215 பயனாளிகளுக்கு ரூ.6.66 கோடி மதிப்பீட்டிலும், காங் கேயம் ஒன்றியத்தில் 199 பயனாளிகளுக்கு ரூ.6.16 கோடி மதிப்பீட்டிலும், திருப்பூர் ஒன்றியத்தில் 171 பயனாளி களுக்கு ரூ.5.30 கோடி மதிப்பீட்டிலும், வெள்ள கோவில் ஒன்றியத்தில் 276 பயனாளிகளுக்கு ரூ.8.55 கோடி மதிப்பீட்டிலும், உடுமலைப் பேட்டை ஒன்றியத்தில் 346 பயனாளிகளுக்கு ரூ.10.72 கோடி மதிப்பீட்டிலும், ஊத் துக்குளி ஒன்றியத்தில் 178 பயனாளிகளுக்கு ரூ.5.51 கோடி மதிப்பீட்டிலும் ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் அவிநாசி ஒன்றியத்தில் 397 பயனாளிகளுக்கு ரூ.3.63 கோடி மதிப்பீட்டிலும், தாரா புரம் ஒன்றியத்தில் 105 பயனாளிகளுக்கு ரூ.71.29 லட்சம் மதிப்பீட்டிலும், குடி மங்கலம் ஒன்றியத்தில் 110 பயனாளிகளுக்கு ரூ.94.96 லட்சம் மதிப்பீட்டிலும், மடத் துக்குளம் ஒன்றியத்தில் 129 பயனாளிகளுக்கு ரூ.98.31 லட்சம் மதிப்பீட்டிலும், மூலனூர் ஒன்றியத்தில் 163 பயனாளிகளுக்கு ரூ.83.14 லட்சம் மதிப்பீட்டிலும், பல் லடம் ஒன்றியத்தில் 164 பயனாளிகளுக்கு ரூ.1.17 கோடி மதிப்பீட்டிலும், பொங்கலூர் ஒன்றியத்தில் 341 பயனாளிகளுக்கு ரூ.2.23 கோடி மதிப்பீட்டிலும், குண் டடம் ஒன்றியத்தில் 111 பயனாளிகளுக்கு ரூ.64.29 லட்சம் மதிப்பீட்டிலும், காங்கேயம் ஒன்றியத்தில் 45 பயனாளிகளுக்கு ரூ.38.61 லட்சம் மதிப்பீட்டிலும், திருப்பூர் ஒன்றியத்தில் 161 பயனாளிகளுக்கு ரூ.1.61 கோடி மதிப்பீட்டிலும், வெள்ள கோவில் ஒன்றியத்தில் 117 பயனாளிகளுக்கு ரூ.1.13 கோடி மதிப்பீட்டிலும், உடு மலைப்பேட்டை ஒன்றியத்தில் 321 பயனாளிகளுக்கு ரூ.2.19 கோடி மதிப்பீட்டிலும், ஊத் துக்குளி ஒன்றியத்தில் 192 பயனாளிகளுக்கு ரூ.1.14 கோடி மதிப்பீட்டிலும் என மொத்தம் திருப்பூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சித்துறையின் சார் பில் 5,186 பயனாளிகளுக்கு ரூ.105.36 கோடி மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்ல திட்டம் மற்றும் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டப்பணிகளுக் கான ஆணைகள் வழங் கப்பட்டுள்ளது.

அந்த வகையில் குடிமங் கலம் ஊராட்சி ஒன்றியத்தில் 2025-&2026ம் ஆண்டு கலைஞரின் கனவு இல்ல திட்டத்தின் கீழ் தலா ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் 136 வீடுகள் ரூ.4.76 கோடி மதிப்பீட்டிலும், ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் 92 வீடுகள் மற்றும் முதலமைச்சரின் வீடுகள் மறுகட்டுமான திட்டத்தின் கீழ் 10 வீடுகளுக்கான ஆணைகள் வழங்கப்பட்டு பணிகள் நடை பெற்று வருகிறது. அந்த வகையில் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் ஊராட்சி ஒன் றியம், கொங்கல் நகரில் ரூ.3.50 லட்சம் மதிப்பீட்டில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டும் பணி, கொங்கல் நகர் புதூரில் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் வீடு பழுது பார்க்கும் பணி மற்றும் அணிக்கடவு ஊராட்சியில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் ஆரம்ப சுகாதார நிலையம், மூங்கில் தொழுவு ஊராட்சியில் ஊரக வீடுகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழ் தலா ரூ.70,000/- மதிப்பீட்டில் 2 வீடுகளில் நடைபெற்று வரும் வீடுகள் பழுது பார்க்கும் பணி களை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்நிகழ்ச்சியில், குடிமங் கலம் வட்டார வளர்ச்சி அலு வலர்கள் சுப்பரமணியம், பரத் கண்ணன், உதவிப் பொறி யாளர் கந்தசாமி மற்றும் துறை சாரந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img