fbpx
Homeபிற செய்திகள்ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மெனோபாஸ் கிளினிக் திறப்பு

ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மெனோபாஸ் கிளினிக் திறப்பு

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் குறிப்பிடத்தக்க ஹார்மோன் மாறுபாடுகள் மற்றும் சமூக மாற்றங்களின் தாக்கத்தால் பெண்கள் உடல் மற்றும் மனரீதியாக பாதிக்கப்படுகின்றனர்.
இந்த பிரச்சினைகளுக்கு சிகிச்சையின் மூலமாக தீர்வளிக்கும் நோக்கில் ஜிகேஎன்எம் மருத்துவமனையில் மெனோபாஸ் கிளினிக் தொடங்கப்பட்டுள்ளது.

மாதவிடாய் நின்ற நிலையில் உள்ள பெண்களின் உலகளாவிய எண்ணிக்கை 2030 வாக்கில் 1.2 பில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆகையினால் தனிச்சிறப்பு வாய்ந்த மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது.

இந்நிலையில் இம்மருத்துவமனையில் வாழ்க்கைமுறை மாற்றங்கள், உடற்பயிற்சி, ஹார்மோன் சிகிச்சை மற்றும் ஷிஷிஸிமிகள், பிஸ்பாஸ் போனேட் சிகிச்சை மற்றும் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் போன்ற சிகிச்சைகள் பற்றிய ஆலோசனைகளை எங்கள் மருத்துவமனை வழங்குகிறது. மேலும் வழக்கமான ஹார்மோன் ஆய்வுகள் மற்றும் வருடாந்திர மருத்துவ சோதனைகளும் செய்யப்படுகின்றன.

இவை பெண்களுக்கு ஆரோக்கியமான, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ உதவுகின்றன. தேவையான மருத்துவ சிகிச்சை மற்றும் சிறப்பு கவனிப்பு ஆகியவற்றுடன் பெண்கள் தங்களது மாதவிடாய் நிற்கும் காலகட்டத்தை கடந்து சென்றிட புதிய மெனோபாஸ் கிளினிக் தொடங்கப்படுறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img