Homeபிற செய்திகள்தலைமை அறிவிக்கும் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்

தலைமை அறிவிக்கும் அனைத்தையும் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும்

தமிழகம் முழுவதும் இளைஞர் அணியின் செயல்பாடுகள் குறித்து மாநிலம் வாரியாக சென்னையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடக்கு மாவட்ட திமுகவிற் குட்பட்ட தூத்துக்குடி மாநகர இளைஞர் அணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பா ளர்கள் ரவி, செல்வின், சங்கரநாராயணன், பிரவீன் குமார், ஆகியோரின் செயல்பாடுகள் குறித்து மாநில திமுக இளைஞர் அணி செயலாளரும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் சிறப்பு திட்ட செயலாக்க துறை அமைச்சருமான உதயநிதிஸ்டாலின் கலந்துரையாடினார்.

அப்போது அமைச் சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: திமுக தலைமைக்கும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் உறுதுணையாக இருந்து கழகப்பணியை நல்லமுறையில் செய்திட வேண்டும்.

தலைமை அறிவிக்கும் நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்து கொண்டு கட்சியின் கொள் கைகளையும் நல்லாட்சியில் நடைபெறும் மக்கள் நலத்திட்டங்களையும் பொதுமக்களிடம் கொண்டு சேர்த்து திமுகவிற்கு வாக்கு வங்கியை அதிகரிக்க வேண்டும்.

ஏற்கனவே தலைவர் கூறிய படி 2026ல் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் 200 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். என்ற இலக்கை தலைவர் நிர்ணயித்துள்ளார். அதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் புதுச்சேரி உள்பட 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று இந்தியாவிற்கே வழிகாட்டும் மாநிலமாக தமிழகம் எந்த கட்சிக்கும் வாய்ப்பளிக்காமல் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி முழுமையாக வெற்றி பெற்றதை போல் 234 தொகுதிகளிலும் முழுமையான வெற்றியை பெறுவதற்கு களப்பணியாற்றுங்கள்.
உங்கள் உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும் வகையில் நல்ல எதிர் காலம் நிச்சயம் அமையும். இவ்வாறு அவர் பேசினார்.

மாநில இளைஞர் அணி துணை அமைப்பாளர் இன்பாரகு, மற்றும் செந்தில்குமார், உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img