Homeபிற செய்திகள்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப்பள்ளியில் இன்று மாண வர்களுக்கும் அவர்களது பெற்றோர்களுக்கும் போதை பொருள் பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு கொடுக்கப்பட்டு உறுதி மொழியும் எடுத்து கொள்ளப்பட்டது.

“நான் போதைப் பழக்கத்திற்கு ஆளாக மாட்டேன். மேலும், எனது குடும்பத்தினரையும், நண்பர்களையும் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் தடுத்து அவர்களுக்கு அறிவுரைகளை வழங்குவேன்.

போதைப் பழக்கத்திற்குள்ளானவர்களை மீட்டெடுத்து அவர்களை நல்வழிப்படுத்த எனது பங்களிப்பை முழுமையாகத் தருவேன்.என்று மாணவர்களும், பெற்றோர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்கள்.

இந்த நிகழ்வில் பள்ளியின் தலைமையாசிரியை மற்றும் பெற்றோர்கள், ஆசிரிய, ஆசிரியைகள், மாணவர்கள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img