நீலகிரி மாவட்டம், உலிக்கல் பேரூராட்சி சுங்கம் சி.எஸ்.ஐ சமுதாய கூடத்தில் நடைபெற்ற ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்ட முகாமினை, மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சித்தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு கூறுகையில், அனைத்து நகர்ப்புற மற்றும் ஊரக பகுதிகளில் ‘உங்களுடன் ஸ்டாலின்” என்ற திட்டத் தினை, முதல மைச்சர், சிதம்பரத்தில் தொடங்கி வைத்து, மனுதாரர்களுடன் கலந்துரையாடினார்.
அதனை தொடர்ந்து, அனைத்து மாவட்ட ங்களிலும் இத்திட்டம் நடைபெற்று வருகிறது. நமது மாவட்டத்தில் முதல் நாளில் 6 இடங் களில் இம்முகாம்கள் நடை பெற்றன. தொடர்ந்து நடைபெற உள்ள இம்முகாம்களை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், உங்களுடன் ஸ்டா லின் திட்ட முகாமில், காவல்துறையின் உதவி மையம், மருத்துவ முகாம் மற்றும் பல்வேறு அரசு துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்குகள், கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட அரங்கம் ஆகியவற்றினை பார்வையிட்டு, துறை அலுவலர்களிடம் முகாமிற்கு வரும் பொது மக்களிடம் தங்களது துறைகளின் திட்டங்கள் தொடர்பான துண்டு பிரசுரங்களை வழங்குமாறு அறிவுறுத்தினார்.
அதனை தொடர்ந்து, இம்முகாமில், அதிகரட்டி பேரூராட்சி கெந்தளா கிராமத்தை சேர்ந்த கட்டு மான தொழிலாளி சுமதி என்பவர் தொழிலாளர் நலவாரிய அடையாள அட்டை புதுபிக்க விண்ணப்பித்தவுடன் உடனடியாக புதுப்பிக்கப்பட்ட தொழிலாளர் நல வாரிய அடையாள அட்டையினை, தொழிலாளர் நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் வழங்கினார்.
இந்நிகழ்வின்போது, உதவி இயக்குநர் (பேரூராட்சிகள்) கணேசன், குன்னூர் வட்டாட்சியர்கள் ஜவகர், காயத்ரி (சமூக பாதுகாப்பு திட்டம்), உலிக்கல் பேரூராட்சி செயல் அலுவலர் செந்தில்குமரன், உலிக்கல் பேரூராட்சி தலைவர் ராதா உட்பட பலர் உடனிருந்தனர்.



