நீலகிரி மாவட்டம் கோத் தகிரி ஊராட்சி ஒன்றியம், நடுஹட்டி ஊராட்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ்’ நடுஹட்டி ஊராட்சிப்பகுதியில் ரூ.18 லட்சம் மதிப்பில் முடிக்கப்பட்ட பல்நோக்கு கட்டடத்தினையும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் கட்டபெட்டு கிராமத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் சவக் சடங்கு தளத்தில் மேற்கூரை அமைக்கப்பட்டதையும், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.7.50 லட்சம் மதிப்பில் கட்டபெட்டு ஊராட்சி ஒன் றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்று வரும் சமையற் கூடம் கட்டும் பணியினையும், 15-வது மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.2 லட்சம் மதிப்பில் ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள பராமரிப்புப் பணிகள் என மொத்தம் ரூ.34.50 லட்சம் மதிப்பில் நடைபெற்று வரும், முடிக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் சா.ப.அம்ரித் செய்தியாளர் பயணத்தின் போது பார்வையிட்டார்.
பின்னர் மாவட்ட ஆட்சி யர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
பொதுமக்கள் நலன் கருதி அனைத்து துறைகளின் சார்பில், பல்வேறு திட்டங் களை தீட்டி சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறார் முதல்வர்.
குறிப்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறையின் சார்பில், ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு திட்டத்தின் கீழ் வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன.
நீலகிரி மாவட்டத்தில், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நடுஹட்டி கிராமத்தில் 2021 – 2022-ம் ஆண்டிற்கு ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ்’ பொதுமக்கள் பங்கு தொகை ரூ.6 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப் பில் பல்நோக்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கெரடாமட்டம் கிராமத்தில் பொதுமக்கள் பங்கு தொகை ரூ.6 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.18 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டும் பணிகளும், நெடுகுளா ஒசாட்டி கிராமத்தில் பொதுமக்கள் பங்கு தொகை ரூ.10 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.20 லட்சம் என மொத்தம் ரூ.30 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
உதகை ஊராட்சி ஒன்றியம் ஒன்னதலை கிராமத்தில் பொதுமக்கள் பங்கு தொகை ரூ.14.10 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.28.15 லட்சம் என மொத்தம் ரூ.42.25 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடமும், பனஹட்டி கிரா மத்தில் பொதுமக்கள் பங்கு தொகை ரூ.1.67 லட்சம், அர சின் பங்கு தொகை ரூ.3.33 லட்சம் என மொத்தம் ரூ.5 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடமும், எப்பநாடு கிராம ஊராட்சியில் எப்பநாடு கிராமம் கொதுமுடியில் பொது மக்கள் பங்கு தொகை ரூ.7.30 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.14.60 லட்சம் என மொத்தம் ரூ.21.90 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
கடநாடு ஊராட்சி ஆலட்டி நடுஹட்டி கிராமத்தில் பொது மக்கள் பங்கு தொகை ரூ.7 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.14 லட்சம் என மொத்தம் ரூ.21 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
நமக்கு நாமே திட்டம்
2022 – 2023-ம் ஆண்டில் உதகை ஊராட்சி ஒன்றியம், கூக்கல் ஊராட்சியில் ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ்’ பொதுமக்கள் பங்கு தொகை ரூ.13.34 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.26.66 லட்சம் என மொத்தம் ரூ.40 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடமும், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியத்தில் கொணவக்கரை கீழ் ஹட்டி கிராமத்தில் பொதுமக்கள் பங்கு தொகை ரூ.7.50 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.15 லட்சம் என மொத்தம் ரூ.22.50 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டடமும், தூனேரி ஊராட்சி கெங்கரை கிராமத்தில் பொதுமக்கள் பங்கு தொகை ரூ.5.33 லட்சம், அரசின் பங்கு தொகை ரூ.10.66 லட்சம் என மொத்தம் ரூ.16 லட்சம்
மதிப்பில் சமுதாய கூடம் மேல் தளம் கட்டும் பணியும் என அரசின் பங்கு தொகை ரூ.52.32 லட்சம், பொதுமக்கள் பங்கு தொகை ரூ.26.17 லட்சம் என மொத்த மதிப்பீட்டு தொகை ரூ.78.50 லட்சம் மதிப்பில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் 2021-2022, 2022-2023 ஆகிய ஆண்டில் கோத்தகிரி, உதகமண்டலம் ஆகிய ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ‘நமக்கு நாமே திட்டத்தின் கீழ்’ (ரூ.1.47 கோடி மதிப்பில் பல்வேறு பணிகள் நடைபெற்று வரு கின்றன), (ரூ.87.15 லட்சம் மதிப்பில் பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன) ரூ.2.34 கோடி மதிப்பில் பல்வேறு பணி கள் நடைபெற்றும், முடிவு பெற்றுள்ளது.
நடைபெற்று வரும் பணி களை தரமாகவும், விரைவாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருமாறு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் அம்ரித்.
கோத்தகிரி வட்டாட்சியர் கோமதி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜனார்த்தனன், அனிதா, உதவி பொறியாளர்கள் செல்வதுரை, ஜெயந்தி உட்பட பலர் உடனிருந்தனர்.