நீலகிரி மாவட்டத்தில் கோ ஆப்-டெக்ஸ் தீபா வளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை ஆட்சியர் அருணா துவக்கி வைத்தார்.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான கோ- ஆப்டெக்ஸ் கடந்த 89 வருடங்களாக தமிழகத் தின் பல்வேறு பகுதிகளில் தமிழக நெசவாளர்களால் உற்பத்தி செய்யப்படும் ஜவுளி ரகங்களை கொள் முதல் செய்து இந்தியா முழுவதும் உள்ள கோ ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் மூலம் சந்தைபடுத்தி நெசவாளர்களுக்கு தொடர் வேலை வாய்ப்பினை வழங்கி அவர்களின் வாழ்வாதா ரத்தை மேம்படுத்தி வருகிறது.
இந்த நிறுவனம் பாரம்பரியமிக்க பட்டு ரகங்களான காஞ்சிபுரம், ஆரணி, சேலம், கோவை மென்பட்டு, திருபுவனம், ராசிபுரம் முதலிய பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் பட்டுசேலைகளை வாடிக்கையாளர்கள் விரும்பும் வகையில் காலத்திற்கேற்ப புதிய வடிவமைப்புகளில் உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது.
வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விற்பனைக்காக கைத்தறி ரகங்களுக்கு 30% அரசு சிறப்பு தள்ளுபடி வழங்குகிறது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதிய வடிவமைப்புகளில் உற் பத்தி செய்யப்பட்ட பட்டு மற்றும் பருத்தி சேலைகள், இயற்கை சாயமிட்ட ஆர்கானிக் சேலைகள், போர்வைகள் படுக்கை விரிப்புகள் தலையணை உறைகள், வேட்டிகள், லுங்கிகள், துண்டு ரகங்கள், திரைச்சீலைகள், ரெடிமேட் சட்டைகள், சுடிதார் ரகங்கள், குர்தீஸ் வகைகள் பலதரப்பட்ட நவீன் வைகள், குல்ட் இரகங்கள் மற்றும் ஏற்றுமதி தரம் வாய்ந்த ஹோம் பர்னிசிங் இரகங்கள் என ஏரள மான ஐவுளி ரகங்கள் தருவிக்கப்பட்டுள்ளன.
மேலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வட்டியில் லாத சுலப தவணையின் மூலம் கடன் விற்பனை உண்டு.
மேலும் கோ-ஆப்டெக்ஸ் மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் மூலம் அதிக வாடிக்கையாளர் பயன்பெறும் வகையில் ரூ.300 முதல் ரூ.3000 வரை மாதாந்திர சேமிப்பு திட்டத்தில் இணையும் வசதியும் உள்ளது.
இத்திட்டத்தில் 11 மாத தவணைகளை வாடிக்கையாளர்கள் செலுத்தும், 12-வது மாத முடிவில் மொத்த தொகைக்கும் வாடிக்கையாளர்கள் தள்ளுபடி விலையில் துணிகளை எடுத்துக்கொள்ளலாம்.
தீபாவளியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோ-ஆப்டெக்ஸ் விற் பனை நிலையத்திற்கு ரூ.1 கோடி விற்பனை இலக்கு நிர்ணயம் செய்யப் பட்டூள்ளது. தீபாவளி சிறப்பு தள்ளுபடி முதல் விற்பனையை ஊட்டியில் நீலகிரி மாவட்ட ஆட்சியர் மு.அருணா குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் கோஆப்&டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் நந்தகோபால், மேலாளர் (வ&உ) ஜெக நாதன் ஆய்வாளர் (வ&உ) முருகன், கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளர் ஷபீனா மற்றும் அதிகாரிகள் மற்றும் திர ளான வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.