நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் – 2024ஐ முன்னிட்டு, அச்சக உரிமையாளர்கள், வட்டிக்கு விடுவோர் மற்றும் நகை அடகு பிடிப்போர், திருமண மண்டபங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட கலெக்டர் அருணா தலைமையில் நடைபெற்றது.
உடன் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌசிக், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்ஷினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) சுரேஷ்கண்ணன் உட்பட பலர் உள்ளனர்.



