fbpx
Homeபிற செய்திகள்‘பழைய கார்களுக்கு நம்பகமான ஊர் கோவை’: ‘கார்ஸ் 24’ தகவல்

‘பழைய கார்களுக்கு நம்பகமான ஊர் கோவை’: ‘கார்ஸ் 24’ தகவல்

இந்தியாவில் முன்னணி ஆட்டோடெக் நிறு வனமாக திகழும் கார்ஸ்24, ஸ்மார்ட்டான முறையில் வாகனத்தை சொந்தமாக வாங்கும் செயல்முறையை ஊக்குவிப்பதில் முதன்மை வகிக்கும் நிலையில், தமிழ்நாட்டில் முன்பே பயன்படுத்திய (பழைய) கார்களுக்கான தேவை கணிசமாக அதிகரித்து வருகிறது.

2023-ம் ஆண்டின் முதல் 6 மாத காலத்தில் பயன்படுத்திய கார்களுக் கான விற்பனை 80 விழுக் காடு அதிகரித்து இருப்பது இதை வலுவாக சுட்டிக் காட்டுகிறது. பழைய கார்களைவாங்குவதற்கு இம்மாநிலத்தில் கார் ஆர்வலர்களது நம்பிக்கை யையும், நன்மதிப் பையும் பெற்ற கார்ஸ்24, தர அளவுகோல்களை நிர்ணயித்து முதலிடம் வகிக்கிறது.

மாநிலத்தின் ஆட்டோ மொபைல் தலை நகரான கோவையில், பயன்படுத்திய கார் விற்பனை 7 மடங்கு அதிகரித்துள்ளது. செப்டம்பர் 2017ல் தமிழ்நாட்டில் அதன் விரி வாக்கம் முதல், CARS24 அதன் தடத்தை வேகமாக விரிவுபடுத்தியுள்ளது.

கோயம்புத்தூர் ஆட்டோமொபைல் துறையானது, சாலை உள் கட்டமைப்பில் மூலோபாய அரசாங்க முதலீடுகளால் தூண்டப்பட்ட வலு வான வளர்ச்சியைக் கண்டுள்ளது.

‘பயன்படுத்தப்பட்ட கார் விற்பனையில் குறிப் பிடத்தக்க அதிகரிப்பு தமிழகத்தில் மாறிவரும் ஆட்டோமொபைல் நிலப்பரப்பின் நேர்மறை யான குறிகாட்டி யாகும்’ என்று CARS24-ன் இணை நிறுவனர் கஜேந்திர ஜாங்கிட் கூறினார்.
கார் விற்பனையில் மாற்றத்தை ஏற்படுத்தும் கார்ஸ் 24, 2023 முதல் அரையாண்டில் தமிழ்நாட்டு மக்களுக்கு ரூ 222 கோடி மதிப்புள்ள கார்களை விற்பனை செய்திருக்கின்றது.

தமிழ்நாடு கார் சந்தையில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியிருக்கிறது.
சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சிராப் பள்ளி, சேலம், தஞ்சாவூர், பொள்ளாச்சி, கடலூர், ஓசூர், திருநெல்வேலி, பாண்டிச்சேரி,திருப்பூர் உட்பட 12 நகரங்களில் இயங்கி வரும் கார்ஸ்24, பயன்படுத்திய கார்கள் துறையில் கணிச மான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img