கோவை தெற்கு மாவட்டம் திமுக பொதுக்குழு உறுப்பினர் இல்ல திருமண விழாவில் அமைச்சர் முத்துச்சாமி கலந்துகொண்டு மண மக்களை வாழ்த்தினார்.
கோவை தெற்கு மாவட்ட திமுக பொதுக்குழு உறுப்பினர் ஆச்சிப்பட்டி கோ.பாலகிருஷ்ணன் – மாலினி இல்ல திருமண விழா குறிச்சி பிரிவில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதில், தமிழக வீட்டுவசதி, நகர்புற வளர்ச்சி மற்றும் மதுவிலக்குத்துறை அமைச்சர் சு.முத்துச்சாமி கலந்து கொண்டு, மணமக்கள் கிஷோர் என்ற பா.கௌதம்குமார் – பா.அகிலா ஆகியோரை வாழ்த்தினார்.
இதில், வடக்கு மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, பொதுக்குழு
உறுப்பினர் ஆச்சிப்பட்டி பாலகிருஷ்ணன், பகுதி கழக செயலாளர் எஸ்ஏ.காதர், முன்னாள் நகராட்சி தலைவர் குறிச்சி பிரபாகரன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.