சாப்ட்வேர் துறையில் திறமையை வளர்க்கும் முன்னணி தளமாக விளங்கிறது நெக்ஸ்ட்வேவ். கடந்த 2 ஆண்டுகளில் 1300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள், தங்களது தொழில்நுட்ப திறமை பெற்றவர்களை தேர்வு செய்துள்ளது.
நெக்ஸ்ட்வேவ், தனிப்பட்ட CCHH 4.0 திட்டம், இளம் வயதினரின் திறனை மேம்படுத்தி தொழில்நுட்ப தேவையை நிரப்பும் விதமாக பணியாளர்களை உருவாக்கி வருகிறது.
வேகமாக வளர்ச்சி பெற்று வரும் அக்செஞ்சர், பாங்க் ஆப் அமெரிக்கா, ஆரக்கிள், காக்னிஜன்ட், கோல்ட்மேன் சாச்ஸ் போன்ற பார்ச்சூன் 500 ஜெயன்ட் நிறுவனங்கள், நெக்ஸ்ட்வேவ் மாணவர்களை தேர்வு செய்துள்ளன.
நெக்ஸ்ட்வேவ் தலைமை செயல் அதிகாரி ராகுல் அட்டுலுரி கூறியதாவது:
அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை 3 மடங்கு உயரும். அடுத்த 5 ஆண்டுகளில் 10,000க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு மென்பொருள் பணியாளர்களுக்கான மாபெரும் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் தளமாக இது திகழும். என்றார்.
யுனிபைடு கம்யுனிகேஷன்ஸ் மனிதவள இயக்குநர் ஷில்பா சவுத்ரி பேசுகையில், “தகவல் தொழில்நுட்ப திறன்களில் நெக்ஸ்ட்வேவ் பட்டதாரிகள் வலுவான அடிப்படையில் உள்ள னர். நெக்ஸ்ட்வேவில், நாங்கள் தேர்வு செய்த பல மாணவர்கள், நன்றாகவே பணியாற்றுகின்றனர்,” என்றார்.
நெக்ஸ்ட்வேவ் பல்வேறு வாய்ப்புகளை உருவாக்க பல வகையான திட்டங்களை வகுத்துள் ளது. மாணவர்களுக்கு உதவும் வகையிலான ஸ்டார்ட் அப், கம்ப்யுட்டர் சயின்ஸ் பிரிவுகள் மற்றும் இன்ஜினியரிங் அல்லாத கல்விகளான பி.எஸ்சி., பி.காம், பிபிஏ போன்றோர்களையும் தகவல் தொழில்நுட்பபணிக்கு மாற்ற பயிற்சிகள் தரப்படுகின்றன.
கேப்ஜெமினி அனலிஸ்ட் ஆக பணியாற்றும் நெக்ஸ்ட்வேவில் பயின்ற வைஷ்ணவி பேசுகை யில், “வேலைவாய்ப்பு குழு, எவ்வாறு நேர்காணல்களை நம்பிக்கையோடு எதிர்கொள் வது, விடையளிப்பது என்பது பற்றி கற்பித்தது,” என்றார்.



