இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள், இந்திய ரூபாயில் ஏற்றுமதி – இறக்குமதி பரிவர்த்தனைகளை செலுத்தவும் நிறைவு செய்யவும் உதவும் வகையில் ‘ருப்பீ வோஸ்ட்ரோ’ கணக்கை வழங்குவதாக ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் பரிவர்த்தனைகளின் விலைப்பட் டியல், பணம் செலுத்துதல் மற்றும் நிறைவு செய்தல் ஆகியவற்றிற்கு ரூபாயைப் பயன்படுத்தலாம் என்பதால், அவர்கள் சுமக்கும் வெளி நாட்டு நாணய அபாயத்தை இந்த முன்மொழிவு குறைக்கிறது.
ஐசிஐசிஐ வங்கியின் லார்ஜ் க்ளையன்ட்ஸ் குரூப் தலைவர் சுமித் சங்காய் பேசுகையில், “ரூபா யில் வெளிநாட்டு வர்த்தகத்தை அதிகரிக்க இந்திய அரசு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக் கைக்கு ஏற்ப, ஐசிஐசிஐ வங்கி, இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் சர்வதேச வர்த்தக பரிவர்த்தனைகளை ஐஎன் ஆர் இல் தீர்த்துக்கொள்ள ருப்பீ வோஸ்ட்ரோ கணக்கை வழங்குகிறது. ஐசிஐசிஐ வங்கி 29 நாடுகளில் உள்ள வங்கிகளின் 100-க்கும் அதிக மான, ரூபாய் வோஸ்ட்ரோ கணக்குகளின் வலுவான இருப்பைக் கொண்டுள்ளது.
இந்த நாடுகள் இந்தியாவின் பெரும்பாலான ஏற்றுமதி – இறக்குமதி வழித்தடங்களை உள்ளடக்கியி ருப்பதால், இந்திய ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் தங்கள் வர்த்தக பரிவர்த்தனைகளை எளிதாக இந்தியன் ரூபாயில் தீர்த்துக்கொள்ள முடியும். இந்திய சர்வதேச வர்த்தகத்தின் வளர்ச்சியை மேம்படுத்தவும், இந்திய ரூபாயில் சர்வதேச வர்த்தகத்தை அதிகரிக்கவும் உதவுகிறது.
இந்தியாவின் பொருளா தார வளர்ச்சிக்கு ஏற்றுமதி-இறக்குமதி மிகப்பெரிய பங்களிப்பாக இருக்கிறது. எங்களின் முன்முயற்சியானது ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்கு மதியாளர்களால் சுமக்கப்படும் வெளி நாட்டு நாணய மாற்று அபாயத்தைக் குறைக்கும் மற்றும் சர்வதேச வர்த்தக முடித்தல்களை விரைவுபடுத்தும் என்று நம்புகிறோம்” என்றார்.



