ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை 2025 முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கை கள் மேற்கொள்வது குறித்து ஆயத்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் சந்திரகலா தலைமைதாங்கி கூறியதாவது:-
வடகிழக்கு பருவமழை -2025 தொடர்பாக நீர்வளத் துறை மூலம் அணைகளின் நீர்வரத்து, இருப்பு, நீர் போக்கு விவரங்களை கண் காணிக்க வேண்டும். குளங்கள், கால்வாய்களை பார்வையிட வேண்டும். நீர்நிலைகளில் உடைப்பு ஏற்பட்டால் உடனடி யாக சரி செய்ய காலி சாக்குகள் மற்றும் மணல் மூட்டைகளை முன் கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அனைத்து நீர் நிலைகளும் தூர் வாரப்பட்டு சரியான முறையில் பராமரிக்கப்பட வேண்டும். பொதுப்பணித்துறை சார்பில் புயலால் பாதிக்கப்பட்டோர் தங்குமிடங்கள் பள்ளிக் கட்டிடங்கள், சமுதாய நலக்கூடங்கள், தனியார் திருமண மண்டபங்களை முன்னதாகவே பார்வையிட்டு நல்ல நிலையில் உள்ளதா? மின் வசதி, தண்ணீர் வசதி 24 மணி நேரமும் பயன்படுத்தும் அளவில் தங்கு தடையின்றி கிடைக்கிறதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். தீயணைப்பு துறை சார்பில் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் நிலை ஏற்பட்டால் உயிர் களை உடனடியாக காப்பாற்ற வும். பாம்பு பிடிக்கும் நபர்கள் குறித்த விவரம் அறிந்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
தீயணைப்புத்துறை வாகனங்கள், அவசர ஊர்திகள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். ஒவ்வொரு வாகனத்திலும் ஜெனரேட்டர், பேட்டரி ஆகியவற்றை சரி செய்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை சார்பில் சாலையில் உள்ள பாலங்களின் அடியில் மழைக்காலங்களில் எவ்வித தடையுமில்லாமல் மழை நீர் செல்லும் வண்ணம் நெடுஞ்சாலை பொறியாளர்கள் அனைத்து பாலங்களையும் உடன் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும்.
பெரிய பாலங்கள் சிறிய பாலங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்வதோடு சாலைகளில் உள்ள மரங்கள் கீழே விழுந்து போக்கு வரத்து பாதிக்கப்பட்டால் அதை உடனடியாக சீர் செய்ய கிரேன், மரம் அறுக் கும் இயந்திரங்கள் போன்ற வற்றை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். சுகாதாரத் துறை சார்பில் புயல் வெள்ள காலங்களில் தேவைப்படும் மருந்துகளை முன்கூட்டியே இருப்பு வைத்துக்கொள்ள வேண்டும். ஆம்புலன்ஸ் வாகனங்கள், ஜெனரேட்டர்கள், மருத்துவ குழு வாகனங்கள் மற்றும் தொடர்புடைய அடிப்படை வசதிகள் அனைத்தையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். கால்நடை பராமரிப்புத் துறை சார் பில் கால்நடைகளுக்கு மழைக்காலங்களில் ஏற்படும் தொற்று நோய் பரவாமல் தடுக்க முன் னேற் பாடு பணிகள், தேவையான மருந்துகள் இருப்பு வைத்துக் கொள்ள வேண்டும்.
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் சார்பில் இடி, மின்னல் போன்றவற்றால் மின் துண்டிப்பு ஏற்பட்டால் உடனடியாக சரி செய்து மின்விநியோகம் வழங்க வேண்டும். இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளின் போது மாவட்ட நிர்வாகத்துடன் ஒருங்கிணைந்து அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் தனலிங்கம், திட்ட மற்றும் இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை சரண்யாதேவி மற்றும் துறைச்சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



