fbpx
Homeபிற செய்திகள்என்.எல்.சி.க்கு நட்சத்திர மதிப்பீடு விருது - ஒன்றிய அமைச்சர் வழங்கினார்

என்.எல்.சி.க்கு நட்சத்திர மதிப்பீடு விருது – ஒன்றிய அமைச்சர் வழங்கினார்

டெல்லியில் நடைபெற்ற விழாவில் நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி, சிறப்பாக செயல்படும் சுரங்களுக்கான நட்சத்திர மதிப்பீடு கொண்ட விருதை என்.எல்.சி. இந்தியா நிறுவனத்திற்கு வழங்கினார்.

இதனை தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் மோட்டுப்பள்ளி சுரங்க இயக்குனர் பிரசன்னகுமார் சுரங்க இயக்குனருடன் இணைந்து பெற்றுக் கொண்டார்.

விழாவில் நிலக்கரி அமைச்சகத்தின் செயலாளர் அம்ரித் லால் மீனா, நிலக்கரி அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் நாக ராஜூ, சுரங்கத் துறை இயக்குனர் சுரேஷ் சந்திர சுமன்,சுரங்க செயல் இயக்குனர்கள் ராஜசேகர ரெட்டி, சீனிவாஸ், ஜாஸ்பர் ரோஸ், மஜும்தார், சுரங்கம்-1-ன் முதன்மை பொது மேலாளர் விவேகானந்தன், சுரங்கம்-2 -ன் பொது மேலாளர் சஞ்சீவி, அபய் பகத், முதன்மை மேலாளர்கள் கோவிந்த ராஜன்,பந்தேகர், சுரேஷ் குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

நவரத்தின தகுதி பெற்ற மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் நிலக்கரி மற்றும் லிக்னைட்(பழுப்பு நிலக்கரி) சுரங்கங்களில் தனித்தன்மை வாய்ந்த செயல்திறனுக்காக 2018- ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரையிலான காலகட்டத் திற்குரிய நட்சத்திரம் மதிப்பு கொண்ட 13 விருதுகளை என்.எல்.சி. இந்தியா நிறுவனம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

படிக்க வேண்டும்

spot_img