தமிழகத்தில் தலைசிறந்த பாலிடெக்னிக் வரிசைப் பட்டியலில் முன்னிலையில் உள்ள கல்லூரி பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி. கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் கொங்கு பாலிடெக்னிக் கல்லூரி அமைந்துள்ளது.
1983-ஆம் ஆண்டு கொங்கு வேளாளர் அறக்கட்டளை மூலம் துவங்கப்பட்ட கல்லூரி ஆகும். புதுடெல்லியில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் குழுவின் சார்பாக தமிழகத்திலேயே ஒப்புதல் வழங்கப்பட்ட முதல் சுயநிதி பாலிடெக்னிக் கல்லூரி ஆகும்.
தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்கத்தின் சார்பாக வாரியத் தோ;வில் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் முதல் இடங்களை பெற்ற கல்லூரி.
கல்வி மட்டும் அல்லாமல் நாட்டுநலப் பணித் திட்டத்தில் தமிழக அரசின் ‘சிறந்த நாட்டுநலப் பணி கல்லூரி” என்ற பெருமையையும் தமிழக அளவில் ‘சிறந்த நாட்டுநலப் பணி திட்ட மாணவர்” என்ற மாணவர் விருதினையும் பெற்ற கல்லூரி. அத்தோடு கொங்கு வேளாளர் அறக்கட்டளை மற்றும் NSS மூலம் ஆண்டு தோறும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு தேவைக்கேற்ப கூடுதல் வகுப்பறை, மிதிவண்டி நிறுத்துமிடம், கழிவறை வசதிகளை இலவசமாய் வழங்கி வருகிறோம். கல்லூரி நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களும் சேவை மனப்பான்மையை நெறிப்படுத்தும் வகையில் பத்து நாட்கள் முகாம் நடைபெறும்.
கல்லூரியில் கல்விக்கு இணையாக வேலைவாய்ப்பை பெற்று தருவதில் முன்னோடியாக உள்ளது. உலகத் தரம் வாய்ந்த பன்னாட்டு நிறுவனங்களுடான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து மாணவர்களுக்கு வருடந்தோறும் ரூபாய் நான்கு இலட்சம் வரை சம்பளம் பெற்று வருகின்றனர். 100% வேலை வாய்ப்பில் கொங்கு பாலிடெக்னிக் மாணவர்கள் திறம் பட பயன்படுத்தி வருகின்றனர்.
மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு பெற்றோர் ஆசிரியர் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. மாணவர்களுக்கு தனித்திறமையை மேம்படுத்தும் வகையில் விடுமுறை காலங்களில் சிறப்பு தொழிற்பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.
வருடங்தோறும் மாணவர் களின் தொழில் சார்ந்த அறிவை மேம்படுத்த தொழில் நுட்ப கருத்தரங்கு தேசிய அளவில் நடைபெறும். இதில் பாலிடெக்னிக் மாணவ – மாணவியா;கள் இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து கலந்து கொள்கின்றனர்.
2023-ஆம் ஆண்டு விளையாட்டுத் துறையில் மாணவர்கள் ஈரோடு மண்டல அளவில் கூடைப்பந்து, சதுரங்கம், மேஜைபந்து போட்டியில் முதல் இடம் பெற்றனர். கையுந்து போட்டியில் இரண்டாம் இடமும் கைபந்து, கேரம், இறகுபந்து, பு+ப்பந்து போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். மாணவிகள் மேஜைபந்து போட்டியில் இரண்டாமிடம், எறிபந்து, சதுரங்க போட்டியில் மூன்றாம் இடம் பெற்றுள்ளனர். சென்ற ஆண்டு மாநில அளவில் மாணவிகளுக்கு நடந்த போட்டியில் தனி நபர் சாம்பியனையும் மாணவர்களுக்கு மேஜைபந்து போட்டியில் முதல் இடமும், கூடைபந்து, இறகுபந்து போட்டியில் மூன்றாம் இடம் பெற்றனர்.
தென்மண்டல அளவிலான போட்டியில் இறகுபந்து போட்டியில் முதலிட மும், மேஜைபந்து போட்டியில் இரண்டாம் இடமும், மும்முறை தாண்டுதல் போட்டியில் மூன்றாம் இடமும் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளனர்.
கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு கொங்கு பொறியியற் கல்லூரியில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர முன்னுரிமை வழங்கப்படுகிறது.
மாணவர்கள் ஆளுமைத் திறன், தேசியப்பற்றை சிறந்து விளங்கும் வகையில் கல்லூரியில் தேசிய மாணவர் படை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு டீ மற்றும் சான்றிதழ் தேர்வு நடத்தப்பட்டு இந்திய இராணுவத்தில் சேருவதற்கு முன்னுரிமை கிடைக்க தகுந்த வழிகாட்டும் நிகழ்வு தொடர்ந்து நடைபெறுகிறது. மாணவ மாணவிகளுக்கு நவீன விடுதி வசதியும், உள் விளையாட்டு அரங்கம் உள்ளது.
பத்தாம் வகுப்பில் 375/500-க்கு மதிப்பெண்கள் எடுத்து பாலிடெக்னிக் கல்லூரியில் சேரும் மாணவ – மாணவிகளுக்கு கல்வி கட்டண சலுகை ஒவ்வொரு துறையிலும் சிறந்து மதிப்பெண்கள் எடுக்க கல்விக் கட்டணத்தில் 25 சதவீதம் கல்வி உதவித் தொகையாக ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. கல்லூரியில் மாணவ மாணவிகளுக்கு பயன்பெறும் வகையில் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி, வங்கி, மருத்துவமனை, தபால் என வசதிகள் உள்ளன.
கொங்கு ஐடிஐ:
கொங்கு வேளாளர் தொழில்நுட்ப அறக்கட்டளை உறுப்பினர்களால் 1997-ஆம் ஆண்டு முதல் கொங்கு ஐடிஐ நான்கு தொழிற்பிரிவுகளுடன் (பிட்டர், எலக்ட்ரீசியன், வெல்டர், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் – புரோகிராமிங்) தொடங்கப்பட்டது.
தற்பொழுது வெள்ளி விழா ஆண்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொங்கு பாலிடெக்னிக் கல்லூரியில் 2003-ஆம் ஆண்டு சிறப்பு திட்டத்தின் அடிப்படையில் இரண்டு ஐடிஐ தொழிற்பிரிவுகள் (மெக்கானிக் மோட்டார் வாகனம், பிளம்பர்) தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த ஆறு தொழிற்பிரிவுகளில் 8-ஆம் வகுப்பு, 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி / தோல்வி கல்வி தகுதியடைய மாணவ – மாணவியர்கள் சேர்ந்து பயிற்சி பெறலாம்.



