மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடம் சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா, குமாரமங்கலம் அரசு துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் ஸ்ரீதர் தலைமையில் சேகர் முன்னிலையில் நடைபெற்றது.
அண்ணாமலை பல்கலைக்கழக கட்டிடவியல் துறை தலைவர் பூங்கோதை சிறப்பு விருந்தினராக பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி மாணவர்களுக்கு வழங்கினார். பேராசிரியர் ஞானகுமார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி நோட்டீஸ் வெளியிட்டு சிறப்பு கருத்துரை ஆற்றினார்.
அதனைத் தொடர்ந்து உசுப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் வடக்கு மெயின் ரோடு நகராட்சி துவக்க பள்ளி மாணவர்களுக்கும் மற்றும் கொத்தங்குடி ஊராட்சி துவக்கப்பள்ளி மாணவர்களுக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் பேராசிரியர்கள் ஆஷா, லதா, ஏழிசை வல்லபி, ஆசிரியர் தனலட்சுமி மற்றும் கார்த்திக் ராஜா உட்பட பலர் பங்கேற்றனர்.



